text
stringlengths 169
2.13k
| chunk_id
int64 1
154
| author
stringclasses 1
value | book
stringclasses 1
value |
|---|---|---|---|
தோழர் காந்தி - மகாத்மாவின் சோசலிச உரையாடல்தோழர் காந்தி - மகாத்மாவின் சோசலிச உரையாடல்முன்னீடுகாந்தியின் நடைமுறைகாந்தியின் சோசலிசம் - தோற்றுவாய்பலவகை சோசலிசம்எது பாதைசர்வோதயாகாந்தியும் அரசும்காந்தியின் தொழிலாளிகாந்தி - லெனின்காந்தி - மாவோசோசலிச உரையாடல்பின்னூட்டம்WHO’s WHOஆதார நூல்கள்ஆசிரியரின் பிற நூல்கள்சிறு வெளியீடுகள்FREETAMILEBOOKS.COMகணியம் அறக்கட்டளைநன்கொடை
Cover
Table of contents
தோழர் காந்தி - மகாத்மாவின் சோசலிச உரையாடல்
ஆர். பட்டாபிராமன்
FreeTamilEbooks.com
CC-BY-NC-SA
தோழர் காந்தி - மகாத்மாவின் சோசலிச உரையாடல்
தோழர் காந்தி - மகாத்மாவின் சோசலிச உரையாடல்
ஆர். பட்டாபிராமன்
[email protected]
மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை : CC-BY-NC-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
அட்டைப்படம் - லெனின் குருசாமி - [email protected]
மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - [email protected]
This book was produced using pandoc
பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/thozhar_gandhi
மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com
அட்டைப்படம்: லெனின் குருசாமி - [email protected]
மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - [email protected]
மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation
Ebook Publisher: http://freetamilebooks.com
Cover Image: Lenin Gurusamy - [email protected]
Ebook Creation: Iswarya Lenin - [email protected]
Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation
பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/thozhar_gandhi
| 1
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
This Book was produced using LaTeX + Pandoc
முன்னீடு
காந்தியடிகள் அவரது வாழ்நாட்களிலேயே மகாத்மாவாக பார்க்கப்பட்டவர். எந்த அளவிற்கு அவர் கொண்டாடப்பட்டாரோ-கொண்டாடப்படுகிறாரோ அந்த அளவிற்கு கடுமையான விமர்சனங்களுக்கும் கண்டனங்களுக்கும் உள்ளாகி வந்தவர் - வருபவர். அனைத்து தரப்பினரின் விமர்சன பகுப்பாய்விற்கு அவர் உள்ளாக்கப்பட்டிருக்கிறார். தங்களின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக நிற்கிறார் என உணரப்பட்டு அவர்மீது வந்த விமர்சனங்கள் ஏராளம். தாங்கள் விரும்பியதை அவர் செய்யவேண்டும் என விமர்சித்தவர்கள் விழைந்தனர்.
இந்த வழிப்பட்ட விமர்சனத்தை இடதுசாரிகளும் பெருமளவில் செய்துள்ளனர். காந்தியை முதலாளித்துவ பிரதிநிதி- ரீஆக்ஷனரி , எதிர்புரட்சிவாதி, சனாதனம் பேசுபவர், உழைக்கும் மக்களின் எழுச்சியை தடுத்து நிறுத்தியவர்- வர்க்க சமரசவாதி போன்ற விமர்சனங்களுக்கு அவர்கள் உள்ளாக்கினர். இதில் சோவியத் - பிரிட்டிஷ் கட்சிகளின் பங்கும் இருந்தது.
விடுதலைக்கு பின்னர் காந்தியை இடதுசாரிகள் மிக நிதானமாக பார்க்கத்துவங்கினர். நேருவை தொட்டுக்கொள்ளலாம் என நினைத்த அவர்கள் அதே நேரத்தில் காந்தியை எடுத்துக்கொள்ளவில்லை. சற்று மரியாதை கூடிய விமர்சனங்களை வைக்கத்துவங்கினர். காந்தியடிகள் குறித்து அதிகாரபூர்வ ‘பார்ட்டி லைன்’ ஏதுமில்லை என ஹிரன்முகர்ஜி தனது காந்தி குறித்த புத்தகத்தில் தெரிவித்திருந்தார். சோசலிஸ்ட்களில் பலர் சற்று நெருக்கமாக காந்தியை வைத்துக்கொண்டனர்.
இந்திய இடதுசாரிகள் காந்தியை முழுமையாக துணைக்கு வைத்திருந்திருக்கலாமோ என்ற எண்ணம் காந்தியை உள்வாங்க துவங்கிய பின்னர் என்னுள் தலைப்பட்டது. அதன் உந்துதலாய் காந்தியின் சோசலிச உரையாடல் குறித்த கருத்துக்களை எழுதிப்பார்க்கவேண்டும் என்கிற அவா மேலிட்டது. இந்த உழைப்பின் வெளிப்பாடாக ‘தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்’ உருவாகியுள்ளது.
காந்தியின் சோசலிச சிந்தனைகள் முன்னரே ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. அவரது பொருளாதார கருத்துக்கள் அடங்கிய தனி தமிழ் வால்யூமே வந்துள்ளது. ஆனாலும் வெவ்வேறு ஆக்கங்களை படிக்கும் போது கிடைத்த கருத்து தெறிப்புகளையும் என்னிடம் அவை ஏற்படுத்திய எதிர்வினைகளையும் சேர்த்துத்தர முயற்சித்துள்ளேன்.
காந்தியின் சோசலிசத்தை மார்க்சிய வகைப்பட்டு அளந்தால் அதை ஏற்பிற்கு உகந்ததாக சொல்லமுடியாமல் போகலாம். ஆனால் காந்திய
| 2
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
ின் மொழியில் அவரது நடைமுறை வாழ்வின் அடியொற்றிப் பார்த்தால் அதை விளங்கிக்கொள்வது கடினமான ஒன்றாக இருக்காது. ஆனால் நடைமுறைப்படுத்துவது கடினமானதாக இருக்கலாம். ஏனெனில் அது சோசலிசம் பேசக்கூடியவர் செய்யவேண்டிய நடைமுறையிலிருந்து - தன்னை மாற்றி தகவமைத்துக் கொள்வதிலிருந்து (transform) துவங்குகிறது. எனவே அந்த வகையில் அது கடினமான பயிற்சியாக இருக்கும்.
காந்தியின் பொருளாதார சிந்தனைகள், தர்மகர்த்தாமுறை, அகிம்சை, சர்வோதயா, ஆஸ்ரம வாழ்க்கைமுறை குறித்தெல்லாம் தனித்தனியாக ஏராள ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. இந்த கருத்தாக்கங்கள் இங்கே விரிவாக பேசப்படாமல் தொட்டுக்காட்டப்பட்டுள்ளன.
தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தி இந்தியாவிற்கு வந்து முழுநேர சேவையாளராக தன்னை மாற்றிக்கொண்ட காலம் என்பது சோவியத்தில் லெனின் தலைமையிலான அக்டோபர் புரட்சி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட ஆண்டுகள். புதுவகைப்பட்ட கட்சியின் வழிகாட்டலில் சோவியத் கம்யூனிஸ்ட்களின் ஆட்சி ஏற்பட்டது. ‘புரட்சிகர ஆட்சியியல்’ - உழைப்பவர்களின் ‘பாட்டாளிவர்க்க சர்வாதிகார ஆட்சி’ என்ற முழக்கத்துடன் லெனின் தலைமையிலான ஆட்சி துவங்கியது .
சோவியத் புரட்சிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே ருஷ்யாவின் டால்ஸ்டாயால் பெருமளவு ஈர்க்கப்பட்டு கடிதப்போக்குவரத்துவரை நடத்திய காந்தியிடம் இந்த ‘புதுவகை ஆட்சி’ ஏன் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்கிற கேள்விக்கு விடை காணவேண்டியுள்ளது. சோவியத் புரட்சியை ஆட்சியை அவர் ஏன் ‘மாதிரி’ என்று ஏற்கவில்லை ? மார்க்சியம் அவரிடம் எந்த அளவிற்கு சென்றது ? சமத்துவ எண்ணமும் சுரண்டலுக்கு எதிராகவும் உழைப்பின் மேன்மையையும் பேசிய காந்தியால் சோவியத் ஈர்ப்பு சுற்றுக்குள் ஏன் போகமுடியவில்லை என்பன குறித்து ஓரளவிற்கு ஆங்காங்கே இந்த நூலில் விவாதிக்கப்பட்டுள்ளது.
‘காந்தியைக் கண்டுணர்தல்’ என்கிற எனது கட்டுரைத்தொகுப்பில் மார்க்சியர் குறித்து சில காந்தியர்களின் கருத்துக்களையும், காந்தி- காந்தியம் குறித்த சில முக்கிய மார்க்சியர் கருத்துக்களையும் தனிக் கட்டுரைகளில் தந்திருக்கிறேன். அக்கட்டுரைகளின் தாக்கத்தாலும் இந்த புத்தகம் உருவானதை சேர்த்தே பதிவிடவேண்டும்.
இவ்வாக்கத்தில் காந்தி- லெனின் மற்றும் காந்தி- மாவோ என இரு பகுதிகள் இடம்பெற்றுள்ளன. முதல் அத்தியாயம் அறிமுகப்பகுதியாக பொதுவாக பேசுகிறது. பின்னூட்ட
| 3
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
ம் என்கிற இறுதிப்பகுதி தொகுப்பு என்ற அளவிலும், பிற்சேர்க்கை என்ற அளவிலும் அமைந்துள்ளதை படிக்கும்போது உணரலாம். இடையில் உள்ள அத்தியாயங்கள் காந்தியின் அரசு குறித்த பார்வை, சோசலிச உரையாடல்களை பதிவிடுகின்றன. காந்தி தொழிலாளர்களின் பாத்திரமாக எதை விரும்பினார் என்பது தனி அத்தியாயமாக வைக்கப்பட்டுள்ளது.
கம்யூனிஸ்ட் முன்னோடிகள் அம்பேத்கர், பெரியாருடன் கூட முரண்பட்டனர். விமர்சித்தே வந்தனர். தற்போது கம்யூனிஸ்ட்கள் உடன்பாட்டு முறையில் செயல்பட்டுவருவதைப் பார்க்கிறோம். அதேபோல் காந்தியை கைக்கொள்வதிலும் கவனம் செலுத்தியிருக்கமுடியும். காந்தி வாக்கு அரசியலுக்கு உதவி செய்யாமல் போகலாம். அறம் சார்ந்த அரசியலுக்கு அவரைவிட நெருக்கமானவர்களை மார்க்சியர்கள் உணரமுடியாது. இந்த புத்தகம் அந்த திசைவழிக்கு சற்று உதவினாலும் மகிழ்ச்சியே.
இவ்வாக்கத்தின் மய்ய சரடு சோசலிசம் என்பது உரையாடல்களால் கோட்பாடுகளின் மேற்கோள்களால் மட்டும் உருப்பெறுவதில்லை. சோசலிச உணர்வை தனிநபர் வாழ்ந்து காட்டலில்தான் துவங்குகிறது என்பதாக இருக்கிறது. Turn Searchlight Inward என்பது சோசலிசம் பேசுபவர்களின் பயிற்சியாகவேண்டும் என்பதில் இருக்கிறது. புரட்சிகளின் மதிப்புகளைவிட மதிப்புகளின் புரட்சியில் இருக்கிறது.
29-4-2021
ஆர். பட்டாபிராமன்
காந்தியின் நடைமுறை
சோசலிசம் பேசக்கூடிய எவரும் அதற்கான கூறுகளை நடைமுறையில் தன்னிடமிருந்து துவங்கவேண்டும் என தனித்தக் குரல் ஒன்று இந்திய அரசியல் வானில் ஒலித்தது. அப்படியே அது தன் வாழ்வில் நடந்தும் காட்டியது. அக்குரலின் சொந்தக்காரர் மகாத்மா காந்தியடிகள்.
சத்யா- அகிம்சா- சத்யாகிரகம்- சர்வோதயம் இவையாவும் இந்திய மக்கள் பயன்படுத்திய பதங்கள். காந்தியடிகள் சொந்த சொத்து ஏதுமற்றவராக, சமத்துவம், சமூகநீதி, சகோதரத்துவம், பரஸ்பர ஒத்துழைப்பு என்பதை அனுசரித்தவராக இருந்தார். சோசலிச நடைமுறைகளை அனுசரித்து வாழ்பவர் என தன்னைப்பற்றி அவர் தெரிவிக்கவும் செய்தார். தன்னை வன்முறையை போதிக்காத கம்யூனிஸ்ட் என அழைத்துக்கொள்ளமுடியும் என்றார். 1930 களிலேயே அவரால் இப்படி உரிமைபாராட்டி சொல்லமுடிந்தது.
“I may tell you that I am trying my best to live up to the ideals of communism
| 4
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
in the best sense of the term”
அதே நேரத்தில் அவர் போனிக்ஸ் ஆஸ்ரம டால்ஸ்டாய் பண்ணை வாழ்க்கை குறித்து சோசலிஸ்ட்- கம்யூனிஸ்ட் வாழ்க்கை என்றெல்லாம் அழைத்துக்கொள்ளவில்லை. தனிநபர்- சமூக உறவுகள் குறித்து அவர் மிக நன்றாக அறிந்தவராக இருந்தார். அதே நேரத்தில் தனிநபரை அரசாங்கம் ஒடுக்கமுடியும் - அதை ஏற்கமுடியாது என்கிற உணர்வுகொண்டவராகவும் இருந்தார்.
சமூக பொருளாதார நீதி கடையவனுக்கும் கிடைப்பதற்குரிய சமூக கட்டுமானத்திற்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் மகாத்மா காந்தியடிகள். கடவுளின் படைப்பு அனைத்தும் சமமாக பாவிக்கப்படவேண்டும். தனிநபரின் நன்மை சமூக நன்மையாகவும் இருக்கவேண்டும் என அவர் உழைத்தார். மற்றவர்களிடத்திலிருந்து அவரை மகாத்மா வெளிச்சத்திற்கு உயர்த்தியது எதுவென்றால் அவருடைய moral ethical means என்பதே ஆகும்.
அரசதிகாரம் என்பதன் மீது அவருக்கு சந்தேகம் இருந்தது. அது எதன் பெயரில் எந்த இசத்தின் பெயரால் அமைந்தாலும் இந்த சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக அவர் அரசதிகாரத்தை பார்க்க மறுத்தார். எனவே தான் அவர் அரசியல் பொருளாதார அதிகார பரவலாக்கம் என சொல்லிவந்தார்.
மானுட வாழ்க்கை என்பது பிளவுபடாதது என்கிற நம்பிக்கை அவரிடம் இருந்தது. மார்க்சிற்கும் சுதந்திரம் பிளவுபடாத ஒன்றுதான். காந்திக்கு பொருளாதார என்கிற ஒற்றை மதிப்பீட்டு மனிதன் சிறந்த மனிதன் அல்லன். அதில் மட்டும் மனித முழுமையை தேடமுடியாது என நம்பினார். அன்பு, கருணை, நெறி- ஒழுக்கம் இவைகள் இணையும்போதுதான் மனித வாழ்வு சிறக்கும்.
காந்தி பேசியதையும் எழுதியதையும் கணக்கிட்டால் 50 ஆயிரம் பக்கங்களாவது இருக்கும்.. அவர்மீது revivalist, reactionary, bourgeois philosopher, statusquoist, arch enemy of progressivism , புரட்சியை தடுத்தவர் என ஏராள வசைகள் வீசப்பட்டு வருகின்றன. ஆனால் அவர் சோசலிசம் என்பதை தான் உணர்ந்தவகையில் அந்த இலட்சியத்திற்குரிய நடைமுறை வாழ்வில் உண்மையாக இருந்தார்.
தொழில்புரட்சியின் கேடுகளை சீர்செய்திட சமூகத்தில் புரட்சிகர மாற்றம் என்கிற ‘பானர்’ உடன்தான் சோசலிச சித்தாந்தம் பிறந்தது எனலாம், கம்யூனிஸ்ட் மானிபெஸ்டோவை தந்த மார்க்ஸ்_ எங்கெல்ஸ் முதலாளித்துவ தொழில்புரட்சி
| 5
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
சமூகத்தில் நிலவும் வர்க்கமோதல்களை- வேறுபட்ட வர்க்க நலன்களை- வர்க்கப்போராட்டத்தின் மூலம் தொழிலாளிகளுக்கு சாதகமாக தீர்க்க முயற்சித்தனர். முரண்பாடு தீர்க்கப்பட்டு இழப்பதற்கு ஏதுமற்றவர்களால் அமைக்கப்படும் சோசலிச சமூகம் தவிர்க்க முடியாதென பேசினர்.
தொழில் சமூகம்- வர்க்கமோதல்கள்- புரட்சிகர வன்முறை ஆயுதப்போராட்டம் மூலம் மாற்றம் என்பது பொதுவான மார்சிய அணுகுமுறையாக சொல்லித்தரப்பட்டது. மார்க்சியம் பொருளாயத நலன்கள் குறித்து உரத்து பேசியது. இந்த அளவுகோலை வைத்து காந்தி மதிப்பிடப்படும்போது அவர் ‘ரிவைவலிஸ்ட்’ ஆக பார்க்கப்படுவார். காந்தியோ தொழில் சமூகம் மீது சந்தேகப்பார்வையை எழுப்பியவர். காதி கிராமத்தொழில் எனப் பேசிவந்தவர். அவரால் வர்க்கமோதல் – வர்க்கப்போராட்டம் - வன்முறை ஆயுதம் தாங்கிய புரட்சி எனப்பேசமுடியாது.
‘முதலாளிகளின் மனமாற்றம்’ என்கிற நம்பிக்கை வரலாற்றில் நடக்காத ஒன்று என்பதால் நடக்கவே முடியாத ஒன்று என அவர் ஏற்கவில்லை. முதலாளிகளுக்கு பேராசை கூடாது என அவர் சொல்லியே வந்தவர். அவர்கள் சுரண்டித்தான் சொத்து பணம் சேர்த்துக்கொண்டவர்கள் என்பதை காந்தி அறிந்தே இருந்தார். புரட்சிகர சோவியத்துகள் என அவர் பேசவில்லை. சுயநிறைவுகொண்ட கிராமக்குடியரசுகள் என்று பேசினார். தர்மகர்த்தாமுறை எனும் சுயஉணர்வுடன் முதலாளிகளும், நிலச்சுவான்தார்களும், அறிஞர்களும், உடல் பலவான்களும், வேறு எவ்வகை சிறப்புகொண்டவர்களும் செயல்பட வேண்டும் என அவர் விவாதித்து வந்தார்.
காந்தியடிகள் சாதாரண ஏழை குடும்ப பின்னணிகொண்டவர் அல்ல. சமஸ்தான திவான்கள்- பிரதமர் அல்லது துணைப்பிரதம அமைச்சர்களின் குடும்பத்திலிருந்து வந்தவர். அவரின் தாத்தாவிற்கு மாதம் ரூ 700 ராஜாங்க ஊதியம் கிடைத்தது. இன்று ஒப்பிட்டால் குடியரசுத்தலைவருக்கு இணையான சம்பளம் எனலாம்.
காந்தியின் தாத்தா உத்தம் சந்த் வீட்டுத்திருமணங்கள் எல்லாமே ‘ராயல் வெட்டிங்’ அரண்மணையின் சாயல்கொண்ட பெரும் வைபமாகவே நடந்தன. காந்தியின் தந்தை கரம்சந்த் போர்பந்தர் ராஜ்கோட் இல்லங்கள் பெரும் செல்வந்தர்களின் வீடாகவே காட்சியில் இருந்தன. காந்தியின் அண்ணன் லஷ்மிதாஸ் வீட்டு
| 6
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
கல்யாணங்களும் அரண்மனை குடும்ப நிகழ்வுகள் போலவே செலவைக்கண்டன. வீட்டு பொருளாதார சூழல் சோசலிச சித்தாந்தத்தை அவருக்கு கொண்டுவந்து சேர்ப்பனவாக இருந்திருக்கமுடியாது.
ரொமெயின் ரோலந்த் எழுதும்பொது காந்தியின் தந்தை சொத்து பற்றி அலட்டிக்கொள்ளதவராக இருந்தவர்- வீட்டிற்கென பெரிதாக அவர் விட்டுச் செல்லவில்லை என்பதைக் குறிப்பிடுகிறார். தர்மகாரியங்களுக்கு செலவிட்டதாகவும் சொல்கிறார்.
வாங்கனீர் சமஸ்தானத்தில் ராஜாவுடன் மனக்கசப்பு காந்தியின் தந்தை பதவி விலக காரணமாக அமைந்தது. கசப்பை நீக்க வேண்டும் - ஈடாக ரூ 10 ஆயிரம் தர சம்மதம் என ஆட்சியாளர் சொன்னதை அவர் ஏற்கவில்லை. நாவல்ராம் எனும் நண்பர் மூலம்தான் பிரதமர் பதவிக்கு அவர் வந்தார். நாவல்ராம் மூலம் கரம்சந்தை ஏற்றி செல்லும் வண்டி காரேஜில் பணப்பை வைக்கப்பட்டது. காபா காந்தி அதை எடுத்து கொடுத்துவிட்டுத்தான் பயணமே மேற்கொண்டார்.
அதே போல் ஆட்சியாளர் வீட்டுமனையாக எவ்வளவு தேவையோ அதை எடுத்துக்கொள்ளலாம் என்றபோது 400 சதுர கஜம் கொண்ட நிலமே போதும்- அதைவிட பெரிதாக காட்டப்பட்ட எதையும் வேண்டாம் என கரம்சந்த் மறுத்துவிட்டார். தனது இறுதி நாட்களில் சமஸ்தான அரசாங்கம் கொடுத்த ரூ 50 பென்ஷனில் வாழ்ந்தார். எனவே சிறு வயதிலேயே காந்திக்கு கையகப்படுத்தல் அவசியமில்லை (non acquisitiveness) என்ற பாடம் நன்றாகவே குடும்பத்தில் கிடைத்தது. இதை அவரின் சோசலிச திசைவழிக்கு கிடைத்த நல்ல பாடமாக கருத முடியும்.
கரம்சந்த் உடன் குறைந்தது 20 பேர்களாவது உணவு உட்கொள்வர். அவ்வளவு உறவினர்க்கும் குடும்பத்தார்க்கும் சமைத்து பரிமாறி மீதமாவதை உண்ணும் பழக்கத்தில் இருந்தவர் புத்லிபாய். அலுப்பில்லாமல் குடும்பத்தை கவனித்தவர். காந்திக்கு சிறுவயதிலேயே ஒருவகையில் அனைவருடனும் சேர்ந்து வாழ்கிற ஆஸ்ரம வாழ்க்கை போன்ற சாயல் கிடைத்தது. பியாரிலால் இதைச் சரியாக சுட்டிக்காட்டினார். இந்த கம்யூனிட்டி வாழ்க்கை மனநிலை என்பதற்கான விதை அவருக்கு கூட்டுக் குடும்ப வாழ்வில் கிடைத்தது.
வைணவம் சார்ந்த ‘இறைவசம் சரணாகதி’ என்கிற தத்துவமும், ஜைனர்களின் ‘அகிம்சையும்’ காந்திக்கு சமூக
| 7
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
நலன்கள் என்பதும் தனிநபர் நலன்கள் என்பதும் பொருந்திப்போக வேண்டியவையே என்கிற எண்ணத்தை வடிவமைத்ததாக சொல்லலாம். இந்திய கிராமப்புற மக்களின் எளிய வாழ்வு குறித்த தேர்ந்த பார்வை காந்தியிடம் இருந்ததை தென்னாப்பிரிக்காவில் அவருடன் வாழ்ந்து பணியாற்றிய போலக் குறிப்பிட்டார்.
உயர்ந்த சாதி என்கிற மனப்பாங்கு இல்லாத இன்னொரு இயல்பும் சிறுவயதிலேயே அவரிடம் பார்க்க முடிந்தது. உகா எனும் கழிப்பறை சுத்தம் செய்பவரை தொடக்கூடாது - அப்படியே தொட்டுவிட்டால் குளிக்கவேண்டும் என்பதை தாயார் சொல்லிக்கொடுத்திருந்தாலும் அப்படி செய்வது தவறில்லையா என தாயிடம் வினவிய 12 வயது சிறுவனாக காந்தி இருந்தார். பிரதமர் வீட்டுப் பையன் என்பதில்லாமல் சாதாரண பள்ளியில் சராசரி மாணவன் என்பதாகவே அவர் பள்ளிக்கூட வாழ்க்கை அமைந்தது.
தொழில்புரட்சியின் ஏகாதிபத்திய இங்கிலாந்திலும் கூட தனது சொந்த அனுபவத்தில் எளிய வாழ்க்கையை நோக்கிய பயணத்தை அவர் தொடங்கிவிட்டார். அங்கு விஜிடேரியன் இயக்கம், சோசலிஸ்ட் இயக்கம் போன்ற புதிய வாழ்வை கட்டவிரும்பிய சோதனைகள் நடந்தவண்ணம் இருந்தன. இச்சூழலில்தான் காந்தியின் லண்டன் படிப்புக் காலம் அமைந்தது.
அமைதியான வழியில் சோசலிச மாற்றம் பேசிய பாபியன் சோசலிஸ்ட்களும், லேபர் கட்சியும் இருந்தனர். காந்தியுடன் பின்னாட்களில் உரையாடிய பெர்னாட் ஷா 1889ல் பாபியன் கட்டுரைகளை எழுதியிருந்தார். குரோபோட்கின் ‘மியூட்சுவல் எயிட்’ சிந்தனைகளும் பரவின. இச்சூழல் அங்கு நிலவினாலும் காந்தி அங்கு விஜிடேரியன் இயக்கத்துடன்தான் தொடர்பில் இருந்தார். ஆனால் ஹென்றி சால்ட் போன்றவர்களின் மனிதாபிமான இயக்கம் சோசலிஸ்ட்களுடனும் சோசலிஸ்ட்கள் ‘விஜிடேரியன்’ இயக்கங்களிலும் இருந்தனர். சால்ட் அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பில் காந்தி லண்டன் விஜிடேரியன் சொசைட்டியின் செயற்குழுவில் இடம் பெற்றார்.
காந்தி 1891ல் எழுதிய விஜிடேரியன் பத்திரிகை கட்டுரையில் கூட இந்தியாவில் பலர் ஏழைகளாக இருப்பதால் அவர்களால் இறைச்சி வாங்கி உண்ணாமுடியாமையும் இருக்கிறது. பலர் ஒரு பைசாவில் வாழக்கூடியவர்கள் என்கிற வெகுஜன நிலைகுறித்து பேசினார். சிலருக்கு மத அனுஷ்டானமாக தாவர
| 8
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
உணவு இருந்தால் , ஏழைகளுக்கு இறைச்சி உணவை வாங்க முடியாத பொருளாதார சூழல் இருந்ததை காந்தி சுட்டிக்காட்டியிருந்தார்.
லண்டன் வாழ்க்கையில் அவரிடம் ஏற்பட்ட முக்கிய மாற்றம் இனி ஆடம்பரவாழ்க்கையில் செல்லக்கூடாது என்பதே. தன் செலவுகளை குறைக்க கற்றுக்கொண்டார். சில மாணவர்கள் சேரிப்பகுதியிலிருந்து வந்தார்கள்- அவர்களின் வாழ்க்கை எளிமையைத் தவிர ஏதுமற்றதாக இருந்தது. அப்படிப்பட்டவர்கள் என் முன்னுதாரணம் ஆனார்கள் என காந்தி குறிப்பிடுகிறார். அவர் ஒற்றை அறை குடியிருப்பையும், தானே சமைத்து சாப்பிடுதல் என்பதற்கும் நகர்ந்தார். உண்மை, எளியவாழ்க்கை, முதலாளித்துவ உலக டாம்பீகங்களிலிருந்து விடுபடுதல் நோக்கி நகர்ந்தார்.
லண்டன் கப்பல்தள தொழிலாளர் போராட்டத்தில் 1889ல் கார்டினல் மான்னிங் உதவியதை அறிந்து அவரை பாராட்ட காந்தி சென்றார். தொழிலாளர் போராட்டம் குறித்து அறிதல் என்கிற உணர்வு அவரிடம் அரும்பியதாக இதைக்கொள்ளலாம். பின்னாட்களில் தென்னாப்பிரிக்கா சுரங்கத்தொழிலாளர் போராட்டம், இந்தியாவில் அகமதாபாத் மில்தொழிலாளர் போராட்டம் என்கிற விரிவை நாம் பார்க்க முடிந்தது.
1889ல் இந்திய தேசிய காங்கிரசில் பங்கேற்க வந்த சார்லஸ் பிராட்லா பம்பாயில் மக்களிடம் பிறந்து மக்களால் நம்பப்படும் நான் மக்களுக்காக உயிர் நீப்பேன். இதில் இனம், எல்லை என்கிற வரையறை ஏதும் என்னிடம் இல்லை எனப் பேசியிருந்தார். லண்டனில் அவர் மறைந்தபோது காந்தி அவரின் இறுதிசடங்கில் பங்கேற்றார்.
தென்னாப்பிரிக்கா 1893-1914 அவரின் அனுபவங்கள் அவரை மகாத்மா நிலைக்கு உயர்த்தியது என்பது பொதுவாக ஏற்கப்பட்ட ஒன்று. எனது அதிருஷ்டம் எப்படியிருக்கிறது என பார்க்க தென்னாப்பிரிக்காவிற்கு சென்றதாகவே காந்தி குறிப்பிட்டிருந்தார். பணத்தேவதையின் அருளாசிகிட்டும் என்கிற நம்பிக்கையில் ஓராண்டிற்கெனச் சென்றவர் இருபது ஆண்டுகள் இருக்க நேர்ந்தது. இந்தியாவிற்கு நிரந்தரமாக திரும்புகையில் எந்தவித உடைமை பாத்தியதையும் இல்லாமல் அவர் வந்திறங்கினார். தென்னாப்பிரிக்காவில்தான் மகாத்மா எனும் நிலைக்கான வேர்கள் பிடித்தன.
சமூகத்தை வஞ்சித்துவிட்டு சொத்துக்குவிப்பது என்பது சோசலிசத்திற்கு உகந்த வழியாக ஒருநாளும் ஏற்கப்படாது. சமத்துவ சமூகம் அமைவதற்கு முதலில் எவர் ஒருவரும் தனது தேவைகளை
| 9
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
குறைத்துக்கொள்ள தெரிந்துகொள்ளவேண்டும். சலுகைகளை கோராததுடன் அனுபவிக்க விழையாத மனம் உடையவர்களாகவும் இருக்கவேண்டும்.
காந்தியிடம் கையகப்படுத்தாமை என்கிற குணம் ஆழத்தோய்ந்திருந்தது. “I have to reduce myself to the level of poorest of poor- non acquisitiveness or renunciation of privileges if possesed are the essence of a socialist system”என்கிற மேம்பட்ட புரிதல் காந்தியிடம் செயல்பட்டது.
தென்னாப்பிரிக்காவில் உண்மைக்கான சோதனைகள், சத்தியாகிரகம், அகிம்சைவழி சோதனைகள் அவரின் வாழ்வில் நடைமுறை அர்த்தம் அடைந்தன. கம்யூனிட்டி வாழ்க்கை சோதனையும் நடந்தேறியது. தனக்கென ஏதும் வைத்துக்கொள்ளாமை, தர்மகர்த்தா முறை, உழைத்து உண்ணவேண்டும் போன்ற அனைத்தும் நடைமுறையில் அனுசரித்து பார்க்கப்பட்டன. காந்திய சோசலிச ‘சிந்தனை- செயல் அரும்புகள்’ மொட்டவிழ் காலமாக இதைப் பாவிக்கலாம்.
1890ல் 40000 ‘indentured labour’ கூலிஅடிமைத் தொழிலாளர்கள் தென்னாப்பிரிக்காவில் இருந்தனர். இந்தியர்கள் எனப்பார்த்தால் 1.5 லட்சம் இருப்பர். அவர்கள் அரைகாட்டுமிராண்டிகள் என்றே அங்கே குறிக்கப்பட்டிருந்தனர். ஆரஞ்சு ஃப்ரி பகுதியில் 1888 சட்டப்படி எவ்வித உரிமையுமற்றவராக இந்தியர் இருந்தனர். டிரான்ஸ்வாலில் ‘தலைவரி’ எனும் கொடுமை பதிவுமுறை இருந்தது. பொது நடைபாதைகளில் வருவதற்கோ, இரவு 9 மணிக்கு பின்னர் வெளிவரவோ அனுமதியில்லை. பாரிஸ்டர் ஆனாலும் இந்தியர் எனில் பொதுப்பெயர் ‘கூலி’ தான்.
டர்பனில் நீதிமன்றத்தில் காந்தி தலைப்பாகையை கழட்ட வற்புறுத்தபட்டார். இரயில் பயணத்தில் முதல்வகுப்பு பயணசீட்டு இருந்தும் மரிட்ஸ்பர்கில் அவர் நடுக்கும் குளிரில் இறக்கிவிடப்பட்டார். இந்த அவமானங்களை உள்வாங்கி அங்குள்ள இந்திய மக்களுக்கான உரிமைப்போராட்டங்களில் மனம் ஒன்றலானார் காந்தி. கடமை குறித்து எண்ணலானார். நின்று போராடுவதா- விட்டுவிட்டு இந்தியா திரும்பிவிடுவதா என்ற மனப்போராட்டம் இல்லாமல் இல்லை. ஆனால் கடமையை செய்யாமல் ஓடும் கோழையாக இருக்கக்கூடாது என முடிவெடுத்தார் காந்தி. இந்த அவமானங்களை சுமரியாதை இழப்புகளை வேருடன் களைய முயற்சி எடுத்தாக வேண்டும் என்கிற தகிப்பு அவரை இயக்கத் துவங்கியது
| 10
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
.
தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் கண்ணியமான வாழ்விற்கு செய்யவேண்டியவை குறித்த செயலில் இறங்கினார் காந்தி. லூயி பிஷர் எழுதினார் ‘That bitter night at Maritzburg the germ of social protest was born in Gandhi’. ஆமாம் அது இருபது ஆண்டுகள் நீடித்தது. அவரின் போராட்டம் ‘சமத்துவம், சகோதரத்துவம், ஃபெலோசிப்’ என்பதற்கான அடையாளங்களை கொண்டிருந்தது. தோழர் டாங்கேவும் எழுதினார் “There he learnt the first lessons of struggle for equality, of human dignity and opposition to radicalism”
வாழ்க்கை பெரும் புதிர்களை சுமந்துகொண்டேயிருக்கிறது. பெருந்தனவந்தர்களுக்காக வேலை செய்ய தென்னாப்பிரிக்கா வந்த காந்தி அங்கு மிகச்சாதாரண ஏழை எளிய தொழிலாளர்களின் கண்ணியம் காக்க தன்னையும் தன் சம்பாத்தியங்களையும் ஒப்புக்கொடுத்தார்.
பாலசுந்தரம் எனும் ஒப்பந்த உழைப்பாளருக்காக அவர் நின்றதை சுயசரிதையில் நாம் பார்க்கமுடியும். அவரின் இத்தலையீட்டால் பல தொழிலாளர் அவரைக் காணவந்ததும் அவர்களின் வாழ்வியல் சுகதுக்கங்களையும் அவரால் அறியமுடிந்தது. அவரின் சத்தியாக்கிரக போராட்டம் ஆயிரக்கணக்கான மக்களின் எழுச்சியாக மாறியது. நியுகாசில் சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தின் நியாயத்தை அவர் உணர்ந்திருந்தார். அவர்களின் சுயமரியாதை உணர்வை பாராட்டி அவர்களிடத்தில் உரையாற்றினார்.
பகவத்கீதா, ஆசியாவின் ஒளி, புதிய ஏற்பாடு ஆகியவற்றின் தாக்கம் துறத்தல் எனும் மனப்பாங்கை அவரிடத்தில் உறுதிப்படுத்தின என சொல்லலாம். ‘கிறிஸ்துவம்’ தவறேதும் இல்லாத புனித மதம் என்று அவர் நண்பர்கள் தென்னாப்பிரிக்காவில் வாதித்ததை அவர் ஏற்காவிடினும், மதம் குறித்த தேடல்களுக்கு அந்நண்பர்கள் பெரிதும் உதவியதாகவே அவர் நன்றிபாராட்டினார். அவர் இந்து, கிறிஸ்து, இஸ்லாம், பார்சி என அனைத்து மதசாரங்களிலிருந்து ஒன்றை கற்றார். கடவுளை மானுட சேவை மூலம்தான் உணரமுடியும் என்பதே அது. கீதை அன்றாட வழிகாட்டும் அகராதியானது. அபரிகிரஹா- சமபாவ எனும் எதையும் சொத்தாக வைத்துக்கொள்ளாமையும் , மனிதர்கள் சமதையாக உணரப்படவேண்டியவர்கள் என்பதும் அவர் வசமாயின.
தென்னாப்பிரிக்காவில்தான் அவரின் தர்மகர்த்தா கொள்கை மேலோங்கியது. ‘ஏதும் வைத்துக்கொள்ளாமை’ என்பதை கீதை கற்றுக்கொடுத்தது.
| 11
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
அப்படியே சொத்திருந்தாலும் அது சமூகத்திற்குரியது- அதன் டிரஸ்டிதான் நாம் என்கிற மனோபாவம் வளர்ந்தால் ஆரோக்கியமான சமதையான மனிதர்களின் சமூக உருவாக்கம் ஏற்படும் என்கிற நம்பிக்கை அவரிடத்தில் திடமாகத் துவங்கியது.
வாழ்வின் ஆரம்பகாலத்தில் மூன்று அம்சங்களால் காந்தி ஆகர்சிக்கப்பட்டார். பெரும் வியாபாரி ராய்சந்த்பாய் அவர்களின் வாழ்ந்துகாட்டும் முறை, டால்ஸ்டாயின் The Kingsom of God is within you, ரஸ்கினின் Unto This last சிந்தனைகள் என அவற்றை சொல்லலாம்.
வெளிப்பகட்டு ஆரவாரங்களால் கடவுளின் ராஜ்யம் வந்துவிடாது. அது உன்னுள் இருக்கிறது. வாழும் உயிர்கள் அனைத்துடனும் சிநேகபூர்வ உறவு கொள்வதாலும் , உளத்தூய்மையாலும்தான் கடவுளின் ராஜ்யம் எழும்பும். ஒருவரின் வாழ்க்கையில் பெறும் நிறைவு அடுத்தவரைவிட அதிகம் பெற்றிருக்கிறோம் வைத்திருக்கிறோம் என்பதில் இல்லை. தன்னை ஒப்படைத்தல் எனும் உயர் நெறியை பழகுவதில்தான் சமூக முன்னேற்றம் தன் நிறைவைக் காண்கிறது என்பதை டால்ஸ்டாய் உணர்த்தினார்.
காந்திக்கு உடனடியான மாற்றத்தை ரஸ்கின் புத்தகம் ஏற்படுத்தியது. ரஸ்கினும் பூர்வீக சொத்துக்களைத் துறந்தவர். சுரண்டலுக்கு எதிராக சமூக காருண்யம், அன்பு என்பதை முன்வைத்தவர். சமூக நலன்களுக்காக அர்ப்பணிப்பு என்பதையும் பேசியவர். நேசிப்பில் பெற்றோர் மனப்பாங்கு அமையவேண்டும் என்றவர். பணக்காரர்கள் கேளிக்கை விருந்தை குறைத்து உழைப்பிலும், ஏழைகள் சற்று உழைப்பைக் குறைத்து நல்விருந்தும் கொடுக்க வாய்ப்புள்ள சமூகம் பலப்படும் என்றுதெரிவித்தவர். ரஸ்கினை ’கிறிஸ்துவ சோசலிஸ்ட்"என அழைக்கலாம்.
காந்தி ரஸ்கினிடம் இருந்து கீழ்கண்ட அம்சங்களை எடுத்துக்கொண்டார்.
தனிநபரின் நன்மை சமூக நன்மையில் இருக்கிறது-
வக்கீல் வேலைக்கான மதிப்பும் முடிதிருத்துவோர் வேலைக்கான மதிப்பும் ஒன்றே. உழைப்பவர் வாழ்க்கை அதாவது உழவர் வாழ்க்கையும் கைத்தொழிலும் உன்னதமானது.
அறிவார்ந்த உழைப்பிற்கும் உடல் உழைப்பிற்கும் நிலவும் வேறுபாடுகள் அவசியமில்லாதது- தேவையற்றது.
காந்தியின் சர்வோதயாவிற்கான இரு அடிப்படைகளை இங்கு நாமும் உணர முடியும். ஒன்று அனைவரின் உதயம்- மேம்பாடு,
| 12
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
மற்றொன்று உடல் உழைப்பின் மேன்மை. காந்தியிடம் idea of cooperative labour என்ற தாக்கத்தை இப்புத்தகம் உருவாக்கியது என்பதை வின்சென்ட் ஷீன் கூற்றில் நாம் பார்க்கலாம். ஒருவகை ‘அக்ரேரியன் கம்யூனிசம்’- விவசாய கம்யூனிசம் என்றார் ஜாப்ரே ஆஷ். காந்திக்கு இக்கருத்துக்கள் முன்பே தெரிந்தவையாக இருந்தன. ரஸ்கின் அதை திடப்படுத்தினார் என எடுத்துக்கொள்ளமுடியும்.
நடைமுறை சோதனைகள் இல்லையெனில் அங்கு காந்தி இருப்பதில்லை. உண்மையை எவ்வாறு ஒவ்வொரு அசைவிலும் நடைமுறையில் அன்றாட அனுசரிப்பிற்குரியதாக்குவது என்பதே அவரின் சோதனைகளின் மையமாக இருந்தது. சுயசரிதையை சத்திய சோதனை என்றே அவர் தந்தார்.
தென்னாப்பிரிக்காவில் அவரது வக்கீல் தொழிலில் சம்பாதித்தவற்றை சமூக வளர்ச்சிக்கு – ‘கம்யூனிட்டி டெவலப்மெண்டிற்கு’ பயன்படுத்தினார். தனது சொந்த வங்கிக்கணக்கில் செலுத்திக்கொள்ளவில்லை. தனது சகோதரருக்கு எழுதிய கடிதத்தில் என்னிடம் பணத்தை இனி எதிர்பார்க்கவேண்டாம்- எனது குடும்பம் பெரிதாகிவிட்டது என அங்கு வாழ்ந்த ‘கம்யூனிட்டி’ சார்ந்த வாழ்வை பெரும் குடும்பமாக குறிப்பிட்டிருந்தார்.
கோகலே அவர்களுக்கு ஏப்ரல் 25 1910ல் எழுதிய கடிதத்தில் 5000 பவுண்ட் பணத்தை இந்தியன் ஒபீனியன் மற்றும் போனிக்ஸ் ஆஸ்ரமத்திற்கு செலவு செய்துள்ளதாக காந்தி தெரிவித்திருந்தார். இன்றுள்ள மதிப்பில் 5 லட்சம் ரூபாய் எனலாம். அவர் 1896 மற்றும் 1901ல் இந்தியா திரும்பும்போது தென்னாப்பிரிக்கா நண்பர்களால் கொடுக்கப்பட்ட பரிசுப்பொருட்களை சொந்தத்திற்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதில் கஸ்தூர்பாய் வருத்தப்பட்டபோதும் உறுதியாக இருந்து காட்டினார். ‘Non possession and Trusteeship’ என்பதை கடைபிடிக்கமுடியும் என்பதற்கு உதாரணமாக நின்றார்.
சொந்தபந்தம் - வெளியார், சொந்த நாட்டவர்- வெளிநாட்டவர், கருப்பு - சிகப்பு, இந்து- முஸ்லீம்- வேறு மதத்தவர் என்கிற வேறுபாடுகளை தன்னால் கடக்கமுடியும் என வாழ்ந்து காட்டினார். I may say that my heart has been incapable of making any distinction என நடந்துகாட்டும் அளவிற்கான மனப்பக்குவம் அவரிடம் வாய்த்தது.
ஜோகன்ஸ்பர்கில் அவரின் 4 எழுத்தர்களும் மகன்களைப்போலவே நடத்தப்பட்டனர். ஸ்காட்டிஷ் சார்ந்த டிக் என்ற பெண் மகளாகவே
| 13
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
நடத்தப்பட்டார். டிக்கிற்கு பிறகு வந்த ஷெல்சின் ஆனாலும் போலக் ஆனாலும் அவரின் குடும்ப உறுப்பினர்களாக இருந்தனர். போலக்கின் திருமணத்தில் காந்திக்கு முக்கிய பங்கிருந்தது. அத்தம்பதியினருக்கு பிறந்த குழந்தையை சீராட்டுவதிலும் காந்தி கவனம் செலுத்தினார். காந்தி மேம்பட்ட புரிதல் பாசம் கொண்ட சகோதரர் என திருமதி போலக் எழுதினார். பெருமளவு சமூகத்தொண்டாற்றவேண்டுமெனில் வீட்டுக் கவலைகளிலிருந்தும் அதன் கவனத்திலிருந்தும் ஒருவர் வெளிவரவேண்டும். காந்தி அதை மிகச்சிறப்பாக செய்து பொது ஊழியன் என்பதற்கான தலைசிறந்த உதாரணமாக திகழ்ந்தார்.
போனிக்ஸ் குடியேற்றம் டர்பனுக்கருகில் 100 ஏக்கர் நிலத்தில் சோசலிஸ்ட் காமென்வெல்த் போலவே உருவாக்கப்பட்டது. 3 ஏக்கர் நிலம் பிரித்து வழங்கப்பட்டு அதில் உழைப்பை நல்கி வாழப்பழகுதல் என்பது நடைமுறைக்கு கொணரப்பட்டது. இந்தியன் ஒபீனியன் பிரஸ் வேலையும் அங்கு இருந்தவர்கள் பார்க்கவேண்டும். எந்த உழைப்பை எவர் நல்கினாலும் அனைவருக்கும் சமமான 3 பவுண்டு ஊதியம் தான் வழங்கப்பட்டது. அது விவசாய குடியேற்றமாகவும் இருந்தது. திருவாளர் ஆல்பர்ட் வெஸ்ட் குடும்பத்துடன் அங்கேயே காந்தியப்போல் தங்கி பிரஸ் வேலைகளைப் பார்த்தார்.
டால்ஸ்டாய் பண்ணை என்கிற சிந்தனை காந்திக்கு தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரகக் காலத்தில் உருவானது. சத்தியாகிரகிகளையும் அவர்களின் குடும்பத்தையும் தங்கவைக்க ஏற்படுத்தப்பட்டது. ‘கோஆப்ரேடிவ் காமென்வெல்த்’ அனைவரும் ஓரிடத்தில் வசிப்பது என்கிற நடைமுறை சோதிக்கப்பட்டது. ஊழலோ அநீதியோ அங்கு இருக்கமுடியாது.. குஜராத்தியர், தமிழர், ஆந்திரர், வடஇந்தியர் என பல்வேறு மக்கள் சேர்ந்து இருந்தனர்.
உடல் உழைப்புதான் அடிப்படை . சிறையைவிட அப்பண்ணையில் அதிக உழைப்பை நல்கவேண்டியிருக்கும் என அறிந்தவர்களே அங்கு கூடி வாழ்ந்தனர். நாம் அனைவரும் உழைப்பாளர்கள்- எனவே எளிய ஆடைகளை அணிவோம் என்பதையும் காந்தி நடைமுறையாக்கினார். டால்ஸ்டாய் பண்ணையை 1100 ஏக்கர் நிலம் அமைய காரணமாக இருந்த ஹெர்மன் கால்லன்பாக் அவர்களும் அங்கு உடல் உழைப்பை தந்தார்.
டால்ஸ்டாய் ஆஸ்ரமத்தில் செருப்பிலிருந்து துணிவரை தைத்துக்கொள்ள
| 14
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
அவர்களே பழகிக்கொண்டனர். காந்தியும் பெண்களுக்கான சட்டை தைப்பதில் பழகியிருந்தார். உழைப்பு அங்கு எங்களுக்கு டானிக்- புத்துணர்ச்சி என்று நினவு கூர்ந்தார் காந்தி. ஒரே சமையலில் ஒரே வகைப்பட்ட உணவை பரிமாறும் கூடமாகவும் டால்ஸ்டாய் பண்ணை விளங்கியது. எளிய ஏழை மக்கள் வாழ்வைப்போல் வாழப்பழகுதல் என்பது பயிற்சியானது.
ரம்ஜான் மாதங்களில் இஸ்லாமிய சகோதரர்களைப்போல் ஒருவேளை உணவை இந்துக்கள் அனுசரித்தனர். இந்துக்கள் ஏற்காத மாட்டுக்கறி உணவை இஸ்லாமியர் எடுத்துக்கொள்ளாமல் இருந்தனர். அங்கு ஒருவகை ‘சோசலிச சிற்றூர்’ சோதனை செய்யப்பட்டது. எம்மொழி, எவ்வினம், எவ்வூர் என்பதெல்லாம் பார்க்காத சமத்துவம் சகோதரத்துவம் பயிற்சிக்கப்பட்டது. சோசலிச வாழ்க்கை முறைக்கான சோதனக்கூடமாக டால்ஸ்டாய் பண்ணை விளங்கியது.
தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த காந்தி தனது இந்திய சோதனைகளை உடனடியாக துவக்கினார். மிதவாதிகள் - தீவிரவாதிகள் என வரலாற்றில் அழைக்கப்படுவோர் மத்தியில் சூரத்தில் ஏற்பட்ட பிளவால் காங்கிரஸ் இயக்கம் சோபை இழந்திருந்தது. இந்தியாவிற்கு 1915ல் திரும்பிய காந்தி இந்தியாவிலிருந்து தாய்நாட்டு சேவையில் எஞ்சிய நாட்களை கழிப்பேன் என்கிற உணர்வை வெளிப்படுத்தினார். ‘சர்வண்ட்ஸ் ஆப் சொசைட்டி’ அவரை சேர்த்துக்கொள்ள தயக்கம் காட்டியது. ஓராண்டாவாது இந்தியா முழுவதும் அவர் போய்வரட்டும். அதற்குப்பின்னர் அவரை சேர்த்துக்கொள்ளும் பிரச்னையை பார்த்துக்கொள்ளலாம் என்கிற அறிவுரை கோகலேயிடமிருந்து கிடைத்தது.
வேட்டி சட்டையுடன் எளிய மனிதராக மக்களுடன் மூன்றாம் வகுப்பில் பயணித்து இந்தியாவை கண்டுணர புறப்பட்டார் காந்தி. காந்தியின் மக்களுடன் மக்களுக்கான செயலாற்றும் திறனை இ எம் எஸ் அவரது மகாத்மா இசத்தில் இவ்வாறு குறிப்பிட்டார். காந்தியின் வாழ்வு திரளான மக்களுடன் அய்க்கியப்பட்ட வாழ்வு. அவருக்கு அரசியல் என்பது புலமைசார்ந்த விவாதமல்ல. தன்னலமற்ற சேவை. இ எம் எஸ் எழுதிய வரிகள்..
“The one point of departure between Gandhiji on the one hand and all other politicians of those days on the other, was that, unlike the latter, Gandhiji associated himself with the masses of the People, their lives, problems, sentiments and aspirations. Politics for him was not a matter
| 15
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
of high level debate among erudite politicians; it was a matter of self less service in defence of people’s interests and identifying oneself with everything that is of the people”
கோகலே அறிவுறுத்திய இக்காலத்தை காந்தி இந்திய பொதுவாழ்க்கைக்கான தனது பயிற்சி பழகுநர் நாட்களாக மாற்றிக்கொண்டார். போனிக்ஸ், டால்ஸ்டாய் பண்ணை போன்று இந்தியாவில் சோசலிஸ்ட் குடியேற்ற காலனி ஒன்றை சோதிக்க முயற்சிகள் எடுத்தார். சபர்மதி ஆசிரமம் உருவாக்கப்பட்டது. இங்கும் பொது சமையலில் சேர்ந்து வாழ்தல் பயிற்றுவிக்கப்பட்டது. அங்கு தனியாக வேலைக்காரரகள் என எவரும் இல்லை. இன்ன வேலை என ஒதுக்கப்படும் தீண்டாமை அறவே இல்லை.
இந்து- முஸ்லீம்- பார்சி, கிறிஸ்துவர் என அனைவருக்குமானது ஆஸ்ரமம். சிறு குழந்தையுடன் தீண்டப்படாதவர் என பார்க்கப்பட்ட குடும்பமும் அங்கு வந்து சேர்ந்தது. பிரச்னை எழாமல் இல்லை. பணம் தருபவர்கள் நிறுத்திக்கொண்டனர். தண்ணீர் ‘சப்ளை’ கூட பிரச்னையானது. சொத்தின்மை, திருடாமை, உண்மை, அகிம்சை, பிரம்மசர்யம், சுயகட்டுப்பாடு அன்றாட அனுசரிப்பிற்குரியனதாக ஆஸ்ரமத்தில் ஆக்கப்பட்டன.
பிப்ரவரி 1916ல் நடந்த பனாரஸ் இந்து பல்கலை துவக்க விழாவில் கவர்னர் ஜெனரல் ஹார்டிங்கே உட்பட சமஸ்தானாதிபதிகள் எல்லோரும் பங்கேற்றிருந்தனர். காந்தியும் அழைக்கப்பட்டிருந்தார். உரையும் ஆற்றினார். மகாராஜா ஒருவர் வறுமை குறித்து உரையாற்றியதை குறிப்பிட்ட காந்தி இந்த விழாவில் வைஸ்ராய் பங்கேற்றுள்ளார். மாலை மாலையாய் நகைகள் அணிந்த ராஜாக்களைப் பார்க்கிறேன். இந்த அலங்கார ஆபரணங்களை நீங்கள் விட்டொழிக்காமல் இந்தியாவிற்கு விடிவு ஏது. அவைகளை நாட்டுமக்களுக்கான டிரஸ்ட் ஆக மாற்றுங்கள் என பேசினார். அவரது உரைகேட்டு அவை அதிர்ந்தது.
அய்யாமார்களே உங்கள் பகுதியில் நகரம் ஒன்று பெரும் கட்டடங்களுடன் எழுகிறது என்றால் அவை விவசாயிகளிடமிருந்து நீங்கள் பெற்ற பணமாகவே இருக்கும். நமது முன்னேற்றம் விவசாயம் சார்ந்தே இருக்கும். இங்கு வக்கீலோ டாக்டர்களோ, நிலச்சுவான்தாரர்களோ அதைக்கொணரமுடியாது.
மேற்கண்ட அவரது உரையின் சாரம் ஒன்றை நமக்கு புலப்படுத்தும்.
| 16
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
ஏழை எளிய உழைப்பாளர்களை உணர்ந்து அதைப்போல் வாழ முயற்சித்த ஒருவரின் உள்ளத்திலிருந்துதான் இவ்வுரை வரமுடியும். ஆனால் அவர் பாதியில் நிறுத்தப்பட்டார். அவரது உரை பலருக்கு அசெளகரியங்களை உருவாக்கியது. உயர் அதிகாரதட்டும் பெரும் சமஸ்தான பணக்காரர்களும் இருந்த அவையில் எழுந்த சோசலிசக் குரல் என இதை நாம் புரிந்துகொள்ளலாம்.
சென்னையில் மிஷினரிகளின் மாநாடு ஒன்றில் அவர் உரையாற்றும்போது அந்நிய மொழி மூலம் படித்துவிட்டு வந்துள்ள மத்தியதரவர்க்கத்தின் அலட்சிய மனப்பான்மையை சுட்டிக்காட்டி உரையாற்றினார். மக்களிடம் செல்லமுடியாதவர்களுக்கான தடையை எடுத்துச் சொன்னார்.. ஆங்கில அதிகாரிகளைப்போலவே இந்திய படித்ததட்டினரும் மக்களால் பார்க்கப்படும் நிலை உருவாகிவிட்டால். அவர்களை நாம் சென்றடையமுடியாது. அவர்களது விருப்பங்கள் நம்மை எட்டாது என்பதை உணர்த்தினார்.
1917ல் ராஜ்குமார் சுக்லா எனும் பீகார் விவசாயியின் வற்புறுத்தலால்தான் சம்பரான் அவுரி சாகுபடி எதிர்த்த போராட்டத்தில் தன்னை காந்தி ஒப்புக்கொடுத்தார். ராஜேந்திரபிரசாத் உள்ளிட்டவர்களின் துணையுடன் அவர் அக்குடிசைவாழ் மக்களை சந்தித்தும், தோட்ட அதிபர்களை சந்தித்தும் உண்மைநிலையை அறிகிறார். வெளியே கோடையின் சுட்டெரிக்கும் சூரியனை விட அவ்விவசாயிகளின் துன்பத்தை துடைத்தெறியவேண்டும் என்கிற கடமைத்தீ அவரிடம் அதிகமாக இருந்தது என பிரசாத் இப்போராட்டத்தில் காந்தியின் பங்களிப்பை நினைவு கூர்ந்தார்.
பொது அமைதியை காரணமாகக் காட்டி மாவட்ட மாஜிஸ்ட்ரேட் வெளியேறவேண்டிய தடை உத்தரவை காந்திக்கு பிறப்பித்தார். மனிதாபிமான சேவைக்கே 144 தடையை மீறி தான் வந்திருப்பதாக காந்தியின் மறுமொழி அமைந்தது.
“காந்தி கிராமங்களுக்கு செல்கிறார். அம்மக்களின் குறைகளை தன் முன்வைக்க வேண்டுகிறார். சோர்ந்து அறியாமையில் உழழும் மக்களிடம் புதிய நம்பிக்கையை அவர் விதைத்து வருகிறார்”என ஏப்ரல் 29 1917ல் மாஜிஸ்ட்ரேட்டிற்கு பெட்டையா எனும் அப்பகுதியின் அரசாங்க அதிகாரி லூயிஸ் எழுதினார்.
வெளிப்படையாக இரகசியம் ஏதுமின்றி காந்தி மக்கள் குறைகளை தீர்த்திட எடுத்துவந்த நடவடிக்கைக்கு பலன் கிட்டாமல் போகவில்லை. அரசாங்கம் இறுதியில் கோரிக்கையை ஏற்று அவுரி சாகுபடி எனும் துயரிலிருந்து
| 17
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
விவசாயிகளை விடுவிக்கவேண்டியதாயிற்று.
பீகாரில் அவர் பார்த்த கிராமங்கள் புழுதிபடிந்து அழுக்காக இருந்தன. கிணற்றை சுற்றி சேறும் சகதியும் இருந்தது. தோல் வியாதியால் பலர் பீடிக்கப்பட்டிருந்தனர். கஸ்தூர்பாய் துணையுடன் அங்குள்ள பெண்கள் நிலையையும் காந்தி அறிந்தார். ஒற்றை சேலையுடன் இரு தமக்கைகள் இருக்கும் நிலைக்கூட உணரப்பட்டது. மாற்று சேலை இருந்தால் குளித்து சுத்தமாக இருக்கலாம் என காந்தியிடம் சொல்லுங்கள் எனக்கூட பதில் கிடைத்தது.
ஆலைப்பாட்டாளிகள் புரட்சியின் ‘வான்கார்ட்’ என புரட்சிகரவாதிகள் பேசிக்கொண்டிருந்தபோது 7 லட்சம் கிராமங்களின் விடுதலையில் புரட்சி அமர்ந்திருப்பதாக காந்தியின் எண்ண ஓட்டம் இருந்தது. அவரால் அடுத்தடுத்து நடத்தப்பட்ட அகமாதாபாத் மில் வேலைநிறுத்தமானாலும் கேதா விவசாயிகள் போராட்டமானாலும் அழைக்கப்பட்டே பின்னரே அவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.
மில்தொழிலாளர் பிரச்னையை அனுசுயாபென் காந்தியிடம் கொணர்ந்தார். அனுசுயாபென் சகோதரர் அம்பாலால் சாரபாய் மில் அதிபர்களிடம் செல்வாக்கு நிரம்பியவர். அவரும் காந்தியை தலையிட்டு தீர்த்துவைக்க வேண்டினார். பம்பாய் மாவட்ட ஆட்சியரும் காந்தியின் வாயால் பிரச்னையை அறிந்துகொள்ள விரும்புவதாக தெரிவித்திருந்தார்.. காந்தி முழுமையாக பிரச்னையை புரிந்துகொள்வதற்காக தொழிலாளர்களிடமும் முதலாளிகளிடமும் விவாதித்து தகவல்களைப் பெற்றார்.
தொழிலாளர் வேலையை நிறுத்திவிட்டால் உலகம் நின்றுபோகும் - தொழிலாளர் ஒற்றுமையுடன் பிரச்சனையை தீர்த்துக்கொள்ள முயற்சிக்கவேண்டும். தொழிலாளர் விரும்பும் 35 சத உயர்வை பெறும்வரை உண்ணாநோன்பு என காந்தி அறிவித்தார். இனி நீங்கள் தலையிடமாட்டீர்கள் என்றால் இப்போது 35 சதம் தரத்தயார் என்கிற செய்திகூட காந்திக்கு தரப்பட்டது. ஆனால் காந்தி அதை ஏற்க மறுத்துவிட்டார். போராட்டம் தொடர்ந்து நடுவர் தீர்ப்பு ஒன்றின் மூலம் தீர்க்கப்பட்டது என்பதை நாம் அறிவோம்.
1961ல் மிஸ்டர் காந்தி என்கிற புத்தகம் எழுதிய ரஞ்சி சஹானி “காந்தி மறையவில்லை - நமது யுகத்தின் ஆன்மீக சூழலில் அவர் நிறைந்து நிற்கிறார்”என எழுதினார். மார்க்சிய வகைப்பட்டு காந்தி வர்க்கப்போராளியல்ல. ஆனால் பாட்டாளிவர்க்க தத்துவத்திற்கு மிக அருகாமையில் நின்று போராடியவர் காந்தி என ராஞ்சி பதிவிட்டுள்ளார்.
1
| 18
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
917ல் நடந்த சோவியத் அக்டோபர் புரட்சி இந்தியாவிலும் பெரும் தாக்கங்களை உருவாக்கியது. AITUC பிறப்பதற்கு முன்பாக மதராசில் பெரம்பூர் தொழிலாளர் மத்தியில் பேசிய திலகர் டிசம்பர் 23, 1919 இனி வரும்காலத்தில் தொழிலாளர் அமைப்புகள் வளரும்- ஆட்சிக்கு கூட தொழிலாளர் வருவர் எனப் பேசி சென்றார்.
நேரு உட்பட பலர் சோவியத் பெருமிதங்களில் சிந்தையை மனதை செலுத்தினர். இங்கிருந்த கம்யூனிஸ்ட் குழுக்கள் மற்றும் புரட்சிகர சக்திகள் மீது ருஷ்ய புரட்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தொழிலாளர்களுக்கு பிரிட்டிஷை தூக்கியெறிவது என்பதுடன் மட்டுமில்லாமல் இந்தியாவில் முதலாளித்துவ சுரண்டலையும் ஒழிக்கவேண்டும் என்கிற கடமையை அப்புரட்சி கொடுத்துள்ளதாக கருதி இங்கு கம்யூனிஸ்ட் கட்சி செயல்படத்துவங்கியது. தொழிற்சங்கம் அமைத்தல், வேலைநிறுத்தம் என்கிற பணிகளில் கம்யூனிஸ்ட்கள் தீவிரம் காட்டினர்.
காந்தியைப்பொறுத்தவரை அவர் மார்க்சியவகைப்பட்ட சோசலிச கருத்தாக்கப்படி அப்போது தன் அனுபவங்களை அமைத்துக்கொள்ளவில்லை. அவருடைய தென்னாப்பிரிக்கா அனுபவமானாலும், இந்தியா வந்தபின்னர் அவர் மேற்கொண்ட சம்பரான் போராட்டம், கேதா சத்தியாகிரகம், அகமதாபாத் பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டம் எதுவும் சோவியத் புரட்சியின் தாக்கத்தாலோ அல்லது மார்க்சிய கருதுகோள்களின் தாக்கத்தாலோ நடத்தப்பட்டவையல்ல. பிரிட்டிஷ் இராணுவத்தில் சேர்ந்த பல இந்தியர்கள் கிராமப்புற விவசாயம் சார்ந்த குடும்பங்களிலிருந்து வந்தவர்கள் என்பதை காந்தியும் அறிந்தே இருந்தார்.
லெனினைப்பொறுத்தவரை முதலாளித்துவத்தின் உச்சகட்டம் ஏகாதிபத்தியம் என்கிற ‘மார்க்சிய வரையறை’ இருந்தது. எனவே ஏகாதிபத்திய எதிர்ப்பு என்கிற கருதுகோளை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். அந்நிய மேலாதிக்கத்திலிருந்து தேசவிடுதலை, தேசங்களின் சுயநிர்ணய உரிமை போன்ற கருத்தாக்கங்களும் லெனினிசம் பெயரில் வலுவாக சொல்லப்பட்டன.
நீதிமன்றவாதத்தில் கூட மார்ச் 18 1922ல் காந்தி பிரிட்டிஷ் ஆட்சி ஒழிப்பு என்பது நோக்கமில்லை என்றார். ஆட்சியாளர் செய்கின்ற தவறுகளை எதிர்த்தே நிற்பதாக சொன்னார். தென்னாப்பிரிக்காவிலும் ஆட்சியாளர் எதிர்த்த போராட்டங்களை அவர் நடத்தியிருந்தாலும் ஆட்சிக் கவிழ்ப்பு என்கிற திசையில் பயணப்பட்டதில்லை. பலநேரங்களில் ஒத்துழைப்புடன் செயல்பட்டதையே பார்க்கமுடியும்.
பிரிட்டிஷ் ஒத்துழைப்பு என்பதிலிருந்து கடுமையான விமர்சகரா
| 19
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
க காந்தியும் செயல்படலானார். ரெளலட் சட்டம்- ஜாலியன்வாலாபாக் படுகொலை, கிலாபத் நேரத்தில் காந்தி இப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுத்தார். சாத்தான் ஆட்சிமுறை என்கிற விமர்சனம் அவரிடமிருந்தது. ஆகஸ்ட் 1 1920ல் அவர் வைஸ்ராய் செம்ஸ்போர்டிற்கு எழுதிய கடிதத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் குறித்து ‘cruelty and inhumanity almost unparelled in modern times’ என்ற தன் பார்வையை வெளிப்படுத்தினார்.
கிலாபத் பற்றி பேசும்போது நியாயமற்ற, தவறுக்கு மேல் தவறு செய்யும் மனசாட்சியற்ற அரசாங்கம்- இப்படிப்பட்ட அரசாங்கத்தின் மீது மரியாதையோ பற்றோ எப்படி வைக்கமுடியும் என வினவினார். அதேபோல் நீதிவிசாரணயிலும் “இங்கு நீதி சட்டம் என்பதெல்லாம் சுரண்டல்காரர்களுக்கு சேவகம் செய்யத்தான் பயன்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட சேவையை செய்வதால் சட்ட நிர்வாகம் தெரிந்தோ தெரியாமலோ வேசித்தனமாகிவிடுகிறது”என்கிற சுடும் சொற்கள் அவரிடமிருந்து வெளிப்பட்டதைப் பார்க்கிறோம். இந்த வார்த்தைகள் எந்த புரட்சிகரவாதிகளின் நெஞ்சுரத்திற்கு சற்றும் இளைத்தவையல்ல என்பதை கூர்ந்து அவதானித்தால் ஏற்கமுடியும்.
அவருடைய ஒத்துழையாமை இயக்கத்தில் கல்விக்கூடங்கள், சட்டமன்ற கவுன்சில்கள், நீதிமன்றங்கள் என்கிற மூன்று பகிஷ்கரிப்புகள் முன்மொழியப்பட்டு நடந்தேறின. இந்த புறக்கணிப்புகள் பிரிட்டிஷ் நிர்வாக முறையின் செயல்பாட்டிற்கான சவால்களாக அமைந்தன. தீமையுடன் ஒத்துழைப்பின்மை என்பது அவரால் கடமை என போதிக்கப்பட்டது. அதே நேரத்தில் அந்நியத்துணி பகிஷ்காரம் என்றால் பிரிட்டிஷை புறக்கணித்து ஜப்பான் துணி அணிவதாகாது என்கிற விளக்கமும் அவரால் கொடுக்கப்பட்டது.
“விடுதலைக்கும் அப்பால் என்பது எனது தாகம்- இலக்கு. இந்தியா மூலம் பூமிப்பந்தில் பிரிட்டிஷ் போன்ற சுரண்டல்காரர்களிடம் மிதிப்பட்டுக் கிடக்கும் நலிந்தவர்களின் துயர்போக்கமுடியும் என்கிற நம்பிக்கையை தருவதே என் இலக்கு”என காந்தி உணர்த்த முயன்றார். லெனின் போல அவர் ஏகாதிபத்தியம் என்பது குறித்து கோட்பாட்டுருவம் ஏதும் தராமல் இருந்திருக்கலாம். இந்த வரிகளில் அவரது ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை நாம் உள்வாங்கிக்கொள்ள இயலும். .
அமிர்தசரஸ் காங்கிரஸ் (1919) திலகர் போன்ற
| 20
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
ஜாம்பவான்கள் இருந்தபோதும் ‘மகாத்மா காந்திக்கு ஜே’ போன்ற முழக்கங்களை காணத்துவங்கியது. அவர் மக்களுடன் - அவர்களின் ஒருவராக கரையத்துவங்கியதை காட்சிகள் காட்டின. தாகூர் மனதின் சித்திரமாக ரொமெயின் ரோலந்த் இதை சரியாகத் தருகிறார்.
“இல்லாதவர்களின் இருப்பிடத்தில் அவர் இருந்தார். அவர்களைப் போல் உடையணிந்தார். அவர்களின் மொழியில் உரையாடினார். அவர் உண்மையாக இருந்தார். மக்கள் அளித்த மகாத்மா என்பது அவரின் உண்மைப் பெயர் ஆயிற்று. இப்படி மக்களுடன் இரண்டறக் கலந்தவர் வேறு எவர்? இந்த மக்கள்தாம் தனது தசை- இரத்த நாளங்கள் என அவரைவிட உணர்ந்தவர் வேறு எவர்”என தாகூர் மொழிந்ததை ரொமெயின் ரோலந்த் தருகிறார்.
பலவீனமானவர்களையும் ஆதரவற்றவர்களையும் பாதுகாக்காமல் சுயராஜ்யம் என பேசுவது கவைக்கு உதவாது என்றார் காந்தி (ஏப்ரல் 14, 1921). எனது சுயராஜ்யம் ‘பங்கிகள்’ போன்ற பலவீனமான பகுதியினரிடம் கவனம் கொள்வது என்றார் (ஜனவரி 8 1925). ஆரம்ப ஆண்டுகளிலேயே அவரால் பொருளாதார சமூகநீதியை நீக்கி சுயராஜ்யம் என்பதை பார்க்கமுடியவில்லை என்பது இக்கூற்றுகள் தரும் எளிய உண்மையாகும்.
தாகூர், ஆண்ட்ரூஸ் ஆகியவர்களுக்கு காந்தி வலியுறுத்திய காதி, ராட்டை என்பதில் முழு ஏற்பு இல்லை. காந்தியோ இந்த நாட்டின் வறுமை பீடித்த மக்களுக்கு பொருளாதார விடிவாக அதைக் கண்டார். தாகூரின் call of Truth க்கு மறுமொழி எழுதிய காந்தி பசிதான் ராட்டை நோக்கிய இயக்கத்திற்கான காரணம். இலட்சக்கணக்கான மக்களை வேலையில் ஈடுபடுத்துவதில் , சோம்பலிருந்து விடுவிப்பதில்தான் சுயராஜ்யம் தன் அர்த்தத்தைப் பெறும் என்றார்.
காந்தி உடல் உழைப்பு என்பதற்கு எவ்வளவு முக்கியத்துவம் தந்தார் என்பதை அறிவோம். கோடிக்கணக்கான வறுமையின் பிடியில் இருக்கும் மக்களை உழைப்புத்தான் விடுவிக்கும். வழியின்றி சோம்பிக்கிடப்பதிலிருந்து விடுபடுதல், வழிகண்டு உழைத்தல் என்பதை பேசாத ஒன்றை அவர் சுயராஜ்யம் என ஏற்கவில்லை. சுயராஜ்யம் என்பதை சோம்பி சும்மா கிடத்தலிருந்து உழைப்பு என்கிற புரிதல
| 21
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
ை நோக்கி அழைத்து சென்றார்.
காங்கிரசை மக்கள்மயப்படுத்துவது - அமைப்பிற்கும் மக்களுக்கும் நெருக்கத்தை உருவாக்குவது என்பதை அவர் கடமையாக்கிக்கொண்டார்- காங்கிரஸ் அமைப்பை ‘class organ to mass organ’ என்றாக்கியதில் அவருக்கு அளப்பரிய பங்கிருந்தது.
காந்தியின் பிரிட்டிஷ் நண்பர் ஹொரேஸ் அலெக்சாண்டர் தனது பதிவில் இதை சரியாகச் சொல்கிறார்.
He had constantly in mind the economic needs of the half starved Indian Villagers ; he cared far more about them than about any political issue, even the issue of independence.
கோடிக்கணக்கான அரைப்பட்டினி மக்களின் பொருளாதார தேவைகள் குறித்து அவரது மனதில் இடைவிடாத எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. அரசியல் பிரச்னை- விடுதலை என்கிற அம்சங்களையெல்லாம்விட இவ்வெண்ணத்தில் அவர் அழுந்தியிருந்தார்.
சாந்திநிகேதன் சார்ந்த மாணவர் ராமச்சந்திரனிடம் (அக்டோபர் 21 1924ல்) காந்தி தன்னை I am a socilaist என அழைத்துக்கொண்டதை பார்க்கிறோம். முன்னதாக செப்டம்பரில் ‘சோவியத் அரசியல் அமைப்பு கான்ஸ்டியூசன்’ பற்றி நேர்மறையாகவே அவர் குறிப்பிட்டிருந்தார். அந்தசட்டங்களின் சாரம் பணம் சம்பாதிப்பதை மய்யமாக வைத்துக்கொள்ளவில்லை. நிலவுடைமை இல்லை, கல்விகூட அடுத்துதான். ஆனால் அங்கு உழைப்பு என்பதுதான் முதல் தகுதிப்பாடாக இருக்கிறது. சரியான உழைப்பை ஒவ்வொருவரும் நல்கவேண்டும் என்பதில்தான் அமைப்புச் சட்டத்தின் தகுதிப்பாடு இருக்கிறது என காந்தியார் தனது புரிதலை எடுத்துச் சொன்னார். எந்த அம்சத்தில் சோவியத் சட்டத்தால் அவர் ஈர்க்கப்பட்டார் என்பது நமக்கு விளங்கிவிடுகிறது- அது உடல் உழைப்பு.
சோசலிச சிந்தனைகள் பரவத்துவங்கிய பத்தாண்டாக 1929-38யை சொல்லலாம். இந்திய தேசிய காங்கிரசிற்கு இரு இடதுசாரி அடையாளங்களாக பார்க்கப்பட்ட நேருவும் நேதாஜியும் தலைமைபொறுப்பை எடுத்தக்காலமும் இந்த பத்தாண்டில்தான். காங்கிரஸ் கராச்சியில் கூடி அடிப்படை உரிமைகள், பொருளாதாரகொள்கைகள் பற்றி தீர்மானங்களை இயற்றிய காலம். காங்கிரசிற்குள் மார்க்சிய தாக்கம்கொண்ட ஆச்சார்யா நரேந்திரதேவ், ஜெயபிரகாஷ் போன்றவர்கள் சோசலிச கட்சியை துவங்கிய காலம்.
காந்தியும் இப்படிப்பட்ட சோசலிஸ்ட்களுடன் தன் விவாதங்களை அவ்வப்போது மேற்கொண்டார். வன்முறையற்ற வழி என்பதை வலியுறுத்தி
| 22
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
சொல்லிக்கொண்டிருந்தார். அப்போதிருந்த காங்கிரஸ் தலைவர்களுள் நேரு, நேதாஜி ஆகியவர்களை நீக்கிப்பார்த்தால் இடதுசாரிகளுடன் தோழமையுடன் விவாதிக்கக் கூடியவராக காந்தி மட்டுமே இருந்தார் என்பதை பார்க்கமுடியும். மீரத் சதி வழக்கு, லாகூர் சதிவழக்கு என்பதில் எல்லாம் கூட குண்டுவீசுவது தவறு என்கிற பார்வையை விட்டுவிடாமல் அத்தோழர்கள்பாற் கரிசனத்தைக் காட்டியவராகவே காந்தி இருந்தார். இந்த அம்சத்தை நாம் புரிந்துகொள்ளாமல் ‘miss’ செய்துவிடக்கூடாது. நேருவை அவர் விமர்சித்திருந்தாலும் இளைஞர்கள் பொறுப்புக்கு வரவேண்டும் என தலைவர் பதவிக்கு அவரை கொணர்ந்தார்.
காந்தி மிக எளிமையான 11 அம்சங்களை சுட்டிக்காட்டி போராடுவதாக அறிவித்தார். நிலவருவாய் பெறுவதை 50 சதம் குறைத்தல், உப்புவரி நீக்குதல், இராணுவசெலவை 50 சதம் குறைத்தல், சிவில் சர்வீஸ் ஊதியத்தை 50 சதம் குறைத்தல் போன்றவற்றை அவர் பட்டியலிட்டார்.
பிப்ரவரி 6 1930ல் காந்தி யங் இந்தியாவில் எழுதினார்.
“இந்திய போராட்டவடிவமாக நாம் அகிம்சையை கொண்டுபோவதில் பெருந்தடையாக இருப்பது பணம்படைத்த வர்க்கத்தினர் - நிலப்பிரபுக்கள், ஆலைமுதலாளிகள் ஆகியவர்களின் சொந்தநலன்களுக்கான செயல்பாடுதான். பலநேரங்களில் பிரிட்டிஷ் ஏஜெண்ட்களாக தாங்கள் செயல்படுகிறோம்- சொந்த மக்களின் இரத்தம் குடித்து வாழ்கிறோம் என்பது அவர்களுக்கு புரியவில்லை.”
மேற்கண்ட வாக்கியங்கள் எந்த இடதுசாரித்தலைமையின் வார்த்தைகளுக்கும் குறைவான ஒன்றல்ல. அவர்கள் பேசுவதைவிட வீச்சும் வலிமையும் கொண்ட எழுத்தாகவே அந்த நேரத்தில் காந்தியின் எழுத்து இருந்திருக்கும் - பணம்படைத்தவர்களால் உணரப்பட்டிருக்கும்.
வைஸ்ராய்க்கு மார்ச் 2 1930ல் எழுதிய கடிதத்தில் கோடிக்கணக்கான சாதாரண மக்கள் பயன்படுத்தும் ‘உப்புக்கும் வரி’ போட்டு சுரண்டுவதை விமர்சித்திருந்தார். பிரிட்டிஷ் ஆட்சி கோடிக்கணக்கான மக்களை வறுமைக்குள்ளாக்கிவிட்டது. தங்களது செலவு மிகுந்த ராணுவ மற்றும் நிர்வாக ஏற்பாடுகளால் இந்த சுரண்டலை அதிகப்படுத்திவருகிறது. இதை இந்த நாடு தாங்காது என எழுதியிருந்தார். அவரின் அஞ்சாமை பிரமிக்கதகுந்தது.
“உங்கள் ஊதியம் மாதம் ரூ 21000. தவிரவும் இதர படிகள்
| 23
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
வேறு. தினம் ரூ 700 பெறுகிறீர்கள். இங்கிலாந்தின் பிரதமர் தினம் ரூ 180 வீதம் மாதம் ரூ 5400 பெறுகிறார்.. இவ்வளவு சம்பளம் தங்களுக்கு தேவைப்படாது. ஆனால் இந்த ‘சிஸ்டம்’ அப்படித்தருகிறது. இதை ஒழிக்கவேண்டும்”என்று அவர் வைஸ்ராய்க்கு எழுதினார்.
காந்தி ஏன் உப்பு என்பதை இவ்வளவு பெரிய விஷயமாக பேசுகிறார் என்பது புதிராக பலருக்கு தெரிந்தது. அவர் புத்தியுடன் இயங்குகிறாரா என்கிற பேச்சும் அடிபட்டது. எதையும் பொருட்படுத்தாமல் உப்பு சத்தியாகிரக யாத்திரை ஏப்ரல் 6 1930 ல் துவக்கப்பட்டது. இது சம்பந்தமான ராஜேந்திர பிரசாத் அவர்களின் பதிவு இப்படித்தான் இருந்தது.
“காந்தி எங்கள் முன்னால் செயற்குழுவில் இந்த ஆலோசனையை வைத்தபோது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. கடற்புரம் தாண்டி வாழக்கூடிய மக்களை இப்போராட்டம் ஈர்க்காது என நம்பினோம். அவர்கள் அனைவரும் வர்த்தகர்களிடமிருந்து உப்பை வாங்கக்கூடியவர்கள். ஆனால் தன் செயல் திட்டத்தில் காந்தி உறுதியாக நின்றார். தடையை மீறுவோம் என்றார். அப்போராட்டம் மக்களை எப்படி கவ்விப் பிடித்து பெரும் வெற்றியைக் கண்டது என வரலாற்றில் காண்கிறோம்.”
இதை நேரு வியந்து எழுதினார். அந்த மனிதர்க்குத்தான் எவ்வளவு அபூர்வ ஆற்றல் என்றார். மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்களை ஈர்க்கக்கூடிய வகையில் காந்தி அப்போராட்டம் நடத்தியதைத்தான் நேரு புகழ்ந்தார்.
கராச்சியில் காந்தி நேரு கலந்துபேசி வெளியிடப்பட்ட தீர்மானத்தில் கீழ்கண்ட வாசகம் இடம் பெற்றது.
“Inorder to end the exploitation of the masses, political freedom must include real economic freedom of the starving millions”
சுரண்டலை முடிவிற்கு கொணர அரசியல் சுதந்திரம் தன்னகத்தே பொருளாதார சுதந்திரத்தையும் சேர்த்துக்கொள்ளவேண்டியதன் அவசியத்தை இதன் மூலம் அந்த இரு தலைவர்களும் சேர்ந்து உணர்ந்து பிறருக்கும் உணர்த்தினர்.
தொழிலாளர்க்கு வாழ்க்கை ஊதியம் ‘living wage’ , ஆரோக்கிய பணியிட சூழல், முதிய காலத்தில் பாதுகாப்பு, அடிமை உழைப்பு ஒழித்தல், பெண் தொழிலாளர் பாதுகாப்பு, தொழிற்சங்கம் அமைக்க உரிமை என்பனவெல்லாம் கராச்சியில் பேசப்பட்டது. நிலவரி குறைப்பு உள்ளிட்ட விவசாயிகளுக்கு துணையான தீர்மானமும்
| 24
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
வந்தது. வரிவிதிப்பில் பெறும் வருவாய்க்கு ஏற்ப, அரசாங்க ஊழியர்களின் வருவாயை குறைத்தல் உள்ளிட்டவையும் பேசப்பட்டிருந்தது.
காந்தியடிகள் பேசும்போது சுயராஜ்யம் பெற்றபின் என்ன செய்யவிருக்கிறோம் என்பதை உலகோர் இத்தீர்மானங்கள் மூலம் அறியமுடியும் என்றார். கராச்சி தீர்மானங்கள் அசமத்துவம் நீக்கும் நோக்கோடு உழைப்பவர்க்கான நியாயமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் பேசியதை நாம் பார்க்கமுடிகிறது. அது உலகோர் கவனத்திற்கும் சொல்லப்பட்ட ஒன்று என்பதையும் பார்க்கிறோம்.
இவற்றில் பெரும்பான்மையான அம்சங்கள் இந்திய அரசியல் அமைப்பு சட்ட முகப்புரையில் வழிகாட்டும் கோட்பாடுகள் பகுதியில் சேர்க்கப்பட்டதை நம்மால் பார்க்க முடியும். கராச்சியில் நேருவும் காந்தியும் ஒன்றுபட்டு கொணர்ந்த தீர்மானம் உருவெடுத்ததைப் பற்றி நேரு பதிவு செய்துள்ளார். கராச்சிக்கு பொருளாதார கொள்கை பற்றிய வரைவுடன் காந்தி வரச்சொன்னார். அவர் பல திருத்தங்கள் தந்து பின்னர் இறுதிவடிவத்திற்கு ஒப்புதல் தந்தார் என்பது நேருவின் பதிவாக இருக்கிறது.
மக்களின் ஆவேசத்தை மாற்றி கவனத்தை திருப்ப செய்திட்ட ஏமாற்று என இத்தீர்மானங்கள் குறித்து விமர்சனங்கள் வராமல் இல்லை. காந்தியை கவனிப்பவர் எவருக்கும் அப்படிப்பட்ட ஏமாற்று எதற்கும் அவர் தன்னை ஒப்புக்கொடுக்கமாட்டார்- பிறரையும் ஏமாற்ற விழையார் என்பது தெரியும்.
ராய்ட்டர் நிருபர் வட்டமேஜை மாநாட்டு தருணத்தில் அவரிடம் பேட்டிக்கு வந்தபோது காந்தி இந்தியாவின் ஏழைகள் தங்கள் குரலை உயர்த்தி சொல்ல முடியும் என்கிற இந்தியாதான் தனது விழைவு - அதற்காகவே பாடுபடுவதாக குறிப்பிட்டார். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்கிற பாகுபாடு அனுசரிக்காத சகல வகுப்பாரும் இணக்கமாக வாழத்தகுந்த இந்தியாவிற்கு தன் முயற்சிகள் அனைத்தும் இருக்கும் என்றார்.
அமையப்போகும் தேசிய அரசாங்கத்திற்கு நீண்ட கால கடமைகள் இருக்கும் என்பதைப் பற்றி காந்தியடிகள் நவம்பர் 19 1931 ல் பேசினார். இந்தியாவில் முதலாளிகள் நிலபிரபுக்கள் பின்னர் விஞ்ஞானரீதியாக பிரிட்டிஷார் ஆகியோரால் ஒடுக்கப்பட்டு அமிழ்ந்துபோய் கிடக்கும் அடித்தட்டு மக்களை உய்விக்கும் சட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்படவேண்டியிருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
வேறு கேள்வி ஒன்றிற்கு இவ்வாறு அவர் பதிலளித்திருந்தார். இந்த நாட்டில் ஏற்கனவே
| 25
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
பணம்படைத்தவர், நிலப்பிரபுக்கள், ஜமீன்கள் வாழ்க்கையின் அனைத்து சலுகைகளையும் அனுபவித்துவருகிறார்கள். இதுகாறும் ஒடுக்கப்பட்டுள்ள, புறக்கணிப்பிற்கு ஆளாக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கு தேசிய அரசாங்கம் செயல்படவேண்டும். இதற்கு மேற்சொன்னவர்களின் உதவியும் தேவைப்படும். பிரிட்டிஷாருக்கும் அரசு வேலைகளுக்கும் சேவகம் செய்து சிலர் நிலங்களை, உடைமை பெற்று சலுகை பெற்றவர்களாக மாறியிருக்கலாம். அவர்கள் உடைமையிழப்பிற்கு உள்ளாக செய்வதே என்னிடம் அரசாங்க அதிகாரம் வந்தால் செய்யக்கூடியதாக இருக்கும் என்பது அவரது பதிலாக இருந்தது.
தேச நலன்கள் கருதி சில தனியார் உடைமைகள் பொதுவாக மாற்றப்பட்டால் அது அவசியம் என்றே கருதப்பட வேண்டும். டெல்லியில் இருந்த பல பெரும் பங்களாக்களை லட்சக்கணக்கானவர்க்கு பயன்படுத்ததக்க மருத்துவமனைகளாக மாற்றலாம் என்றார் காந்தி. அப்படி செய்யும்போது இழப்பீட்டுத்தொகை கொடுக்கவேண்டியதும் இல்லை என்றார். இவைபோன்ற கருத்துக்களை அவர் உதிர்க்கும்போது சோவியத்தின் சில நடைமுறைகளை அவர் தன் வழியில் அமுலாக்க நினைத்துள்ளார் என கருத இடமுண்டு.
லண்டனில் இருந்தபோது லங்காஷயர் மில் தொழிலாளர்களை அவர் சந்தித்தார். காந்தியின் அந்நிய துணி பகிஷ்கரிப்பால் அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்பது பொதுபுத்தியில் இருந்தது. அனைத்தையும் மீறி அவர்களுடன் காந்தியால் உரையாட முடிந்தது. நீங்கள் 30 லட்சம்பேர் வேலையில்லாமல் இருக்கின்ற நிலைமையை சொல்கிறீர்கள்- எங்கள் நாட்டில் 30 கோடி பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர். வேலையில்லாவிட்டாலும் உங்களுக்கு 70 ஷில்லிங் வருவாய் கொடுக்கிறார்கள். இந்தியாவில் 7 ஷில்லிங் கூட கிடைப்பதில்லை. உங்கள் துயரிலும் எங்களை ஒப்பிடும்போது நீங்கள் சற்று மேம்பட்டு இருப்பதை உணர்வீர்கள் என அவர்களிடம் பக்குவமாக காந்தி விளக்கினார். இப்படி தன்னால் பாதிக்கப்பட்டவர்கள் எனக் கருதிய தொழிலாளிகளை நேரில் பார்த்து அவர்கள் ஏற்கும் வண்ணம் உரையாடும் உண்மை உள்ளம், தெளிந்த பார்வை கற்க வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது.
மேற்கில் பொதுவாக பொருளாதார மேம்பட்ட நிலை ஒன்றே அவர்களின் சமூக அந்தஸ்தை குறிப்பதாக இருந்தது. அங்கு நம்மைப் போன்ற சாதி சமூக வேறுபாடுகள் இல்லை. பொருளாதார சமத்துவம் ஏற்படுத்திவிட்டால் அது சோசலிச திசைவழி எனவும்
| 26
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
பொதுவாக ஏற்கப்பட்டிருந்தது. இங்கோ சமத்துவ சமுதாயம் என்பது பொருளாதாரக் காரணியை மட்டும் கொண்டில்லாமல் ஏற்றத்தாழ்வு படிநிலை தன்மைகொண்ட சாதி முறையிலிருந்து அடிநிலையில் இருப்போரை சமூகரீதியாக உயர்த்தும் பெரும் பிரச்னையாகவும் இருக்கிறது.
அடிமைப்பட்டுக் கிடக்கும் தேசத்தில் அடிமையானவன் சரியானவற்றைக் கூட செயலாற்ற இயலாதவனாக இருக்கிறான். பஞ்சமர் பிரச்னை மிக முக்கியமானதென்றாலும் பெரும் போராட்டத்தில் அதுவும் உள்ளடக்கம் என்கிற பொதுக்கருத்தையும் காந்தி ’யங் இந்தியா’வில் குறிப்பிட்டார் .
தீண்டாமை என்பதை அனுமதித்த வகையில் இந்துமதம் பெரும் பாவத்திற்கு உள்ளாகியுள்ளது என்பதை அவர் பலமுறை எடுத்து சொன்னார். ‘vicious excrescence upon Hinduism’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்து மதத்திற்கு மாபெரும் வெட்கக்கேடு என வருத்தப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் வட்டமேஜையில் தனி வாக்காளர் தொகுதி என்பதை அவர் நிராகரித்தார். இந்தியாவில் இந்து சமூகம் மத்தியில் ஏற்படவேண்டிய ‘ஒருங்கிணைப்பு ஒற்றுமை உள்ளிழுத்துக் கொள்தல்’ என்பதற்கு அது தடையாக இருக்கும் எனக் கருதினார்.
“I would not sell the vital interests of the untouchables for the sake of winning freedom of India”என்று மாநாட்டில் தன் நிலைப்பாட்டை வைத்தார். இந்தியாவின் தீண்டப்படாதவர்களின் நலன்களை காவுகொடுத்து சுதந்திரம் என்பதில் ஏற்பில்லை என்பது அவரது நிலைப்பாடாக இருந்தது.
இங்கிலாந்தின் பிரதமர் காந்தியின் கருத்துக்களை ஏற்காமல் கொடுத்த அவார்ட் எதிர்த்து காந்தி தன் உண்ணாநோன்பை செப்டம்பர் 20 1932ல் துவங்கினார். அப்போது அவர் தான் எதற்கு நிற்கிறேன் என்பதை சில வரிகள் மூலம் தெளிவுபடுத்தினார்.
“நான் விரும்புவது, எதற்கு வாழ்கிறனோ அது, எதற்காக உவப்புடன் என் உயிரைவிடவும் தயாராக இருப்பேனோ அது வேரடி மண்ணுடன் தீண்டாமை ஒழிப்பு என்பதுதான்.”
இந்து தலைவர்கள் என அறியப்பட்டவர்களும் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களும் தொடர்ந்து விவாதித்து, இறுதியில் அம்பேத்கர் சம்மதத்துடன் புனே எரவாடா ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு அதை பிரிட்டிஷ் அரசும் ஏற்றபின்னர் காந்தி தன் உண்ணாநோன்பை செப்டம்பர் 26 1932 அன்று கைவிட்டார். எரவாடா சிறையிலிருந்து ஹரிஜன மேம்பாட்டு வேலைகளை செய்யத் தடையே
| 27
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
தும் இருக்கக்கூடாது என்பதையும் சிறை அதிகாரிகளிடம் உறுதிமொழியாகப் பெற்றார். இந்து தலைவர்கள் பம்பாய் மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றியதையும் நாம் பார்க்கமுடிகிறது.
“This conference resolves that henceforth amongst Hindus, no one shall be regarded as an untouchable by reason of his birth, and those who have been so regarded hitherto will have the same rights as other Hindus, in regard to the use of public wells, schools, roads and other public institutions. This right will have statutory recognition at the first opportunity and shall be one of the earliest acts of the swaraj parliament..”.
பிப்ரவரி 1936ல் அவர் எரவாடாவிலிருந்தே ஹரிஜன சேவா சங்கத்தையும் ஹரிஜன் என்கிற வாரந்தரியையும் துவக்கினார். மே 8 1933லிருந்து 21 நாட்கள் உண்ணாநோன்பு என காந்தி அறிவிக்கிறார். இந்த உண்ணாநோன்பு முற்றிலும் தாழ்த்தப்பட்டவர் பிரச்னை சார்ந்தது . கசப்பை நீக்கவும் மனங்களை தூய்மைபடுத்தவும் என்ற அறிவிப்பை செய்தார். நேரு போன்றவர்கள் சிவில் ஒத்துழையாமையை நிறுத்திவிட்டதை அதிருப்தியுடனேயே பார்த்தனர். காந்தி சொன்ன காரணங்கள் என்னை ஆச்சர்யப்படுத்துவதாக இருக்கின்றன என்றார் நேரு. சிறையிலிருந்து வந்த காந்தி ஹரிஜன மேம்பாட்டு யாத்திரையை துவக்கினார்.
காங்கிரஸ் சோசலிச கட்சி உருவானபோது காந்தி வரவேற்றார். அந்த குழு வளரட்டும், செல்வாக்கு செலுத்தட்டும் என்றார். செப்டம்பர் 17, 1934ல் அவர்கள் குறித்த தனது பார்வையை தெளிவாக முன்வைத்தார்.
“சோசலிச குரூப் உருவானதை நான் வரவேற்கிறேன். உடன் பணியாற்றும் அவர்களில் பலர் மரியாதைக்குரிய தியாகங்கள் செய்திட்ட தோழர்கள். அவர்கள் அதிகாரபூர்வமாக வெளியிட்ட திட்டம் குறித்த வெளியீட்டில் எனக்கு அடிப்படையான வேறுபாடுகள் இருக்கின்றன. நான் எவ்வகையிலும் செல்வாக்கு செலுத்தி அவர்தம் கருத்துக்கள் பரவாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கமாட்டேன். எனக்கு எவ்வளவுதான் உவப்பில்லாத கருத்தாக இருந்தாலும் அவர்களின் கருத்து சுதந்திர உரிமையில் எனது தலையீடு இருக்காது”
இங்கு சுதந்திரமாக கருத்தை வெளிப்படுத்தும் உரிமை என்பதில் வால்டேர் போல் காந்தியடிகள் பேசுவதை நாம் காண்கிறோம். எனக்கு உவப்பானதாக இல்லாவிட்டாலும், அடிப்படை வேறுபாடுகள் இருந்தாலும், சோசலிஸ்ட்களின் கருத்துக்களை ஒடுக்கவேண்டும் என கருதமாட்டேன்
| 28
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
என்கிற அவரது அறிவிப்பை இதில் நாம் பார்க்கமுடிகிறது.
அதேநேரத்தில் அவர்களின் வர்க்கப்போராட்டம், தனியார் சொத்தை பறித்தல் போன்றவை காங்கிரஸ் இயக்கத்தில் வலுப்பெற்றால் தன்னால் காங்கிரசில் தொடரமுடியாது என்பதிலும் அவர் தெளிவாக இருந்தார். காங்கிரஸ் சோசலிஸ்ட்களிடம் விவாதித்தபோது இந்தியத் தன்மைக்கேற்ற நடைமுறை சாத்தியம்கொண்ட திட்டம் கொண்டுவாருங்கள் என ஆலோசனை நல்கினார்.
“I suggest your presenting the country with practical socialism in keeping with Indian conditions, instead of scientific socialism, as your programme has been called”
நேரு பேசிவரும் Scientific socialism என்பதில் உடன்பாடு இல்லை என்பதையும் காந்தி வெளிப்படையாகவே தெரிவித்தார். ஏழு லட்சம் கிராமங்களின் முன்னேற்றம் என்பதை மய்யமாக கொண்ட சோசலிசம் என்பதையே அவர் விரும்பினார் என கிருபளானி எழுதினார். இந்தியத் தன்மையில் ஒளிரும் சமத்துவ கருத்துக்களை அவர் சோசலிசம் குறித்த மதிப்பிற்குரியவையாக பார்த்தார். சோசலிசம் என்பதை வன்முறை கலந்தோ- மார்க்சியத்திற்குமட்டுமே உரித்தான ஒன்றாக பார்க்கவேண்டியதில்லை என்பதே காந்தியின் கருத்தாக இருந்தது. அது ஈசோ உபநிடத்திலேயே தனக்கு கிடைத்தது எனவும் அவர் சொல்லிவந்தார்.
“Socialism was not born with the discovery of the misuse of capital by capitalists. As I have contended, socialism, even communism is explicit in the first verse of Ishopanishad”
அவரின் இந்தப் பார்வையை எந்த மார்க்சியரும் எற்கமாட்டார்கள். அதேபோல் காந்தியும் மேற்குவகைப்பட்ட சோசலிச சிந்தனையை ஏன் ஏற்கவில்லை என்பதை தெளிவுபடுத்தினார்.
“மேற்குலகம் பேசும் சோசலிசம் மற்றும் கம்யூனிசம் நமது கருத்துருவத்திலிருந்து அடிப்படையில் மாறுபட்டதாக இருக்கின்றது. அவர்களது நம்பிக்கை மனிதன் அடிப்படையில் சுயநலமிக்கவன் என்பதாக இருக்கிறது. ஆனால் எனக்கு இதில் உடன்பாடில்லை. மனிதனுக்கும் கொடும் விலங்குகளுக்கும் இயல்பில் வித்தியாசம் இருக்கிறது. மனிதனால் தன் உணர்வுகளில் மேம்பட்டு உயரமுடியும். அவனால் விலங்கு இயல்பிலிருந்து விடுபட்டு சுயநலம், வன்முறை இல்லாமல் இயங்கமுடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”
“என்னை நான் சோசலிஸ்ட் என்றே அழைத்துக்கொள்கிறேன். அந்தப்பதம் மிகவும் அழகானது- பிடித்தமானது. ஆனால் பல சோசலிஸ்ட்கள் உபதேசிப்பதைப் போன்ற ஒன்றை நான் சொல்லிக்கொடுக்க
| 29
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
மாட்டேன்”
அவர் சோசலிஸ்ட் என்றே அழைத்துக்கொள்வதையும் அந்த வார்த்தை மீது ஈர்ப்பு இருப்பதையும் வெளிப்படுத்தியதைக் காண்கிறோம். ஆனால் சோசலிஸ்ட்கள் பேசுகின்ற முறையில் அதை பரப்புரை செய்வதில்லை என அவர் சொல்வதை மேற்கண்ட பத்தி நமக்கு விளங்கச் செய்யும். ஒருமுறை பம்பாயில் தொழிலாளர் கூட்டம் பேசும்போது கம்யூனிசம் பற்றிப் பலர் பேசுகின்றனர். ஆனால் நானோ கம்யூனிச வாழ்வை நடத்துகின்றவன் என தன்னைப்பற்றி காந்திஜி குறிப்பிட்டார்.
“கம்யூனிசம் பேசுகிறவர்கள் அப்படி தன் வாழ்வில் நடந்து கொள்வதுபோல் எனக்கு தெரியவில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை அந்த இலட்சியத்திற்குரிய நடைமுறை வாழ்வை அனுசரிக்க பெரும் முயற்சி எடுத்து வருகிறேன்”என்பது அவரது உரையில் தெரித்தது.
கம்யூனிசம் என்பது என்ன என்கிற கேள்வியை எழுப்பி வர்க்கபேதமற்ற- வர்க்கமில்லாத சமுதாயம் அமைப்பது என்பது தானே என்கிற பதிலையும் காந்தி தருகிறார். இந்த உன்னத இலட்சியத்தில் பிரச்னை ஏதும் இல்லை. ஆனால் அதை வன்முறை வழியில் அடைவது எனப் பேசும்போது நான் அவர்களிடமிருந்து விலகிவிடுகிறேன் என தன் நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்தினார்.
இதிலிருந்து பார்க்கும்போது சோசலிசம் - கம்யூனிசம் என்பதை வர்க்கமோதல் தத்துவம் - சிவில் யுத்தம் மூலம் அமுலாகவேண்டிய ஒன்று என்ற பொருளில் அவர் ஏற்கவில்லை என்பதை அறியமுடியும். முதலாளி- தொழிலாளி இணக்கம் என்பதையும், முதலாளிகள் மனமாற்றம்- தர்மகர்த்தாமுறை என்பதையும் அவர் பேசிவந்தார். இதை மார்க்சியவாதிகளால் ஏற்கமுடியவில்லை. காந்தியோ கீழ்கண்ட உரையாடலுக்குத்தான் அழுத்தம் தந்தார்.
நிலப்பிரபுக்களையும் முதலாளிகளையும் வன்முறை மூலம் மாற்றமுடியாது. அவர்களிடம் நியாய உணர்வை உருவாக்கித்தான் மாற்றம் காணவேண்டும். உங்களிடம் செல்வம் இருக்கலாம்- ஆனால் அதை உங்கள் விருப்பம் போல் உங்களது நலன் சார்ந்த செயல்களுக்காகவே செலவிடமுடியாது. அதை தர்மகர்த்தா போல் இருந்து பாவிக்க கற்கவேண்டும் என்பதுதான் அவர் தந்த அழுத்தம். இப்பார்வையை அவரின் பெரும் செல்வாக்கிற்கு இலக்காகியிருந்த சோசலிஸ்ட் தலைவர் ராம்மனோகர் லோகியா கூட ஏற்கவில்லை.
முதலாளிகளும் சொத்து படைத்தவர்களும் அப்படியெல்லாம் மனம்மாறி திருந்த மாட்டார்கள் என சொல்லப்பட்டபோது காந்தியடிகள் தனது நம்பிக்கையை
| 30
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
முன்வைத்தார். ஜமீன்தார்கள் செய்திடும் தீங்கை விவசாயத் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு நின்று சரி செய்யமுடியும். வேலை செய்ய அனைவரும் மறுத்துவிட்டால் ஜமீன்தார் என்ன செய்யமுடியும். உழைப்பாளரின் ஒற்றுமையால் முதலாளிகளிடமும்- ஜமின்களிடமும் மனமாற்றத்தைக் கொணரமுடியும் என்கிற நம்பிக்கையை அவர் எதன் பொருட்டும் கைவிடாமல் இருந்தார்.
“If the toilers intelligently combine, they will become an irresistable power. That is how I do not see the necessity of class conflict”என்ற சமாதானத்தை அவர் சொல்லிவந்தார்.
உற்பத்தி சாதனங்கள் தனியாரிடமா அரசிடமா என்கிற கேள்விக்கும் அவர் விடை பகர்ந்தார். அவர் தந்த பதிலில் அனைத்திலும் தேசியமயம் என்கிற சோவியத் மாதிரியை அவர் எடுத்துக்கொள்ளவில்லை என்பதைக் காணமுடியும்.
“I believe in the nationalisation of key and prinicipal industries as is laid down in the resoultion of Karachi congress. More than that I can not at present visualise. Nor do I want all the means of production to be nationalised.”
போனிக்ஸ், டால்ஸ்டாய் பண்ணை, சபர்மதி, சேவாகிராம் போன்ற காந்தியடிகளின் ஆசிரம வாழ்க்கை முறை ஒருவகைப்பட்ட சோசலிச சிறு சமூக குடியேற்றமாக பார்க்கப்படுகிறது.
1941ல் வெளியான நிர்மாணதிட்டத்தில் சமத்துவம் பற்றி பேசுகிறார். அகிம்சைவழிப்பட்ட சுதந்திரத்தில் சமத்துவம் என்பது அடிப்படையான திறவுகோலாக இருக்கவேண்டும். இதற்கு மூலதனத்திற்கும் உழைப்பிற்குமான மோதல் முடிவுறவேண்டும். செல்வம் குவிந்து கிடக்கும் சிலரை மட்டுப்படுத்தி, கோடிக்கணக்கான அரைப்பட்டினி மக்களை மேலுயர்த்தி விடவேண்டும். பணக்காரர்- ஏழை என்கிற அதல பாதாள வேறுபாடு நிலவும்வரை அகிம்சைவழி அரசாங்கம் என்பது எட்டாக்கனியாக இருக்கும். இந்த நாட்டில் பணக்காரர் அனுபவிக்கும் சலுகைகளை ஏழைகளும் அனுபவிக்கும் நாள் வரவேண்டும் என குறிப்பிட்டிருப்பதை நாம் காணமுடியும்.
பணக்காரர்கள் மனமுவந்து மாறாவிட்டால் நாட்டில் இரத்தக்களறி ஏற்படுவது தவிர்க்க முடியாமல் போகலாம் என்கிற எச்சரிக்கையை அவர் விட்டுக்கொண்டிருந்தார்.
காந்தியடிகள் ஆகாகான் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டிருந்த நாட்களில் மார்க்ஸ்- எங்கெல்ஸ் எழுத்துகளுடன் லெனின் ஸ்டாலின் எழுத்துக்களையும் காந்தி
| 31
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
படித்தார் என்கிற பதிவை ஒரிஸ்ஸா உட்கல் பல்கலை பேராசிரியர் பேணுதார் பிரதான் தருகிறார். மார்க்சின் காபிடல் நூலை வாசித்துவிட்டு என்னை வசிகரிக்கவில்லை என்ற கருத்தை மட்டுமில்லாது I would have written it better என்றும் சொல்கிறார். அப்போது அவருக்கு வயது 74 என்பதையும் சேர்த்து நாம் பார்க்க வேண்டும். எதையும் எழுச்சிகர மனநிலையிலிருந்து அணுகாமல் தேவையை புரிந்து சாத்திய எல்லைக்குள் நின்று செயல்படும் பக்குவம் நிறைந்த வயதது. மக்களை வெகுவாக திரட்டிப் போராடிய அனுபவத்துடன் பேசுகிற வயது என நாம் பார்த்தால் காந்திக்கு எவ்வளவு திமிர் இப்படி பேசுகிறார் என நினைக்காமல் இருக்கமுடியும்.
மார்க்சிய எழுத்துக்களும், சோவியத் பற்றிய சில வாசிப்புகளும் அவருக்கு சோவியத் நாட்டின் மீதான கவன ஈர்ப்பை சற்று அதிகப்படுத்திய பத்தாண்டுகளாக 1938-48யை கொள்ளலாம். இரண்டாவது உலகப்போர் சமயத்தில் 1942ல் செஞ்சேனை குறித்து வந்த தகவல் ஒன்றைக் கேட்டுவிட்டு ‘ருஷ்யா போரில் தோற்றுவிட்டால்’ உலகில் ஏழைகள் வேறு எவரை நோக்கமுடியும் என்ற தன் கவலையை காந்தி பகிர்ந்துகொண்ட செய்தி நமக்கு கிடைக்கிறது.
அவர் ஆகாகான் சிறைவாசக் காலத்தில் (1942-44) இவ்வாறு சொன்னார். I do not care whether Marxism is right or wrong. All I know is that poor are being crushed. Something has got to be done for them. To me this is axiomatic. மார்க்சியம் சரியா தவறா என்பதல்ல அவரது முக்கிய பிரச்னை. ஏழைகள் ஒடுக்கப்பட்டு அமுக்கப்படுவதை விடுவிப்பது என்பதே அவர் முதல் பிரச்னை. அதற்கு என்ன செய்யவேண்டும்- ஏதாவது செய்யவேண்டும் என்பது தான் அவரின் இயங்கு அச்சு.
சமத்துவம் சரியானதே - அதை எவ்வாறு அளவிடுவது என்பது எப்போதும் மிக முக்கிய கேள்வியாக நிற்கும். உருவ அமைப்பில் மனிதர்கள் வேறுபட்டே இருக்கிறோம். பிறப்பொக்கும் என்பது மிகச் சரி. அதே நேரத்தில் திறன், உடல்வலிமை, புத்திக்கூர்மையில் வேறுபாடுகள் நிலவும்.
இது குறித்து பேசும்போது காந்தி கீழ்கண்ட புரிதலை தருகிறார் . “அனைத்திலும் சமத்துவம் என இருக்கமுடியாது. சோசலிசத்தின் அடிப்படை பொருளாதார சமத்துவத்தில் இருக்கிறது.
| 32
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
சிலர் செல்வத்தில் புரள்வதும் கோடிக்கணக்கானவர் உணவிற்கு ஏங்குவதுமான சமூகத்தில் ராமராஜ்யம் எழாது. அவரவர் ஜீரண சக்திக்கு உணவு என்பது போல் தேவைக்கேற்றவை கிடைக்க செய்தல் என்பதான சமத்துவ விநியோகம்”இது ஏறக்குறைய மார்க்சிய புரிதலான To each according to his need என்பதுடன் ஒத்துப்போவதைப் பார்க்கலாம்.
எவருக்கும் சரிவிகித உணவு, உகந்த வாழிட வசதி, குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்புகள், போதுமான மருத்துவ வசதி என்பவைதான் எனது பார்வையில் பொருளாதார சமத்துவத்தின் அடிப்படைகள். இந்த அடிப்படை வசதிகளை அனைவருக்கும் உறுதி செய்த பின்னர் நமது உயர்ந்த வளர்ச்சிக் கனவுகள் வரட்டுமே என அவர் சொல்லிவந்தார். சமத்துவம் எனில் எவற்றில் அவசியமாக அது அமையவேண்டும் என்பதை அவரின் மேற்கூறிய கூற்று வெளிப்படுத்திவிடுகிறது.
காந்தியார் உடல் உழைப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் தந்தவர் என்பதை அறிவோம். மூளை உழைப்பாக ஆனாலும் உடல் உழைப்பாக ஆனாலும் சம மரியாதையை பெறவேண்டும் என வலியுறுத்தியவர். உடல் உழைப்பில்லாதவர் உண்ண உரிமையற்றவர் என்ற கருத்தை வெளிப்படுத்தியவர்.
நாள் ஒன்றின் நேர்மையான உழைப்பிற்கு அது ’பங்கி’யானாலும், டாக்டர் ஆனாலும், வக்கீல் ஆனாலும், டீச்சர் ஆனாலும் சம ஊதியம் பெறும் இந்தியா வேண்டும் என்று அவர் பேசியதை பார்க்கிறோம். இந்த முறை உருவாக்கப்பட்டுவிட்டால் உலகம் நம்மைப் பார்த்து வியப்பதுடன் பொறாமையும் கொள்ளும் என்றார்.
1946ல் லூயி பிஷருடன் உரையாடியபோது தன்னை கம்யூனிஸ்ட் என்றே அழைத்துக்கொண்டார். தனக்கு கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட் நண்பர்கள் இருப்பதை குறிப்பிடும் போது அவர்களில் பலர் எனக்கு மகன்கள் போலத்தான். ஆனால் சரி தவறான முறைகளை அவர்கள் வித்தியாசப்படுத்திக் கொள்வதில்லை (fair and foul distinction). அவர்கள் ருஷ்யாவிலிருந்து கட்டளைகளைப் பெற்றுக்கொண்டிருப்பதையும் பார்க்கிறேன். இந்தியாவைவிட தங்கள் ஆன்மாவிற்கு நெருக்கமாக அவர்கள் சோவியத்தை பார்க்கிறார்கள் என்கிற தனது விமர்சன பார்வையை காந்தியடிகள் வைத்தார்.
சோசலிசம் என்பது தூய்மையான படிகம். எனவே அதனை அடைவதற்கும் தூய்மையான வழிகளே வேண்டும். தூய்மையற்ற வழிகள் எனில் விளைவும் அவ்வாறே அமையும். இளவரசர் தலையை துண்டித்து
| 33
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
எறிந்துவிடுவதாலேயே லட்சக்கணக்கானவர் அவருக்கு இணையான வாழ்க்கையை பெற்றுவிடமுடியாது. உண்மையான நடத்தைகள் மூலம் தான் உண்மையை அடையமுடியும். அகிம்சை வழியை மேற்கொள்ளும் தூய்மையான இதயம் கொண்ட சோசலிஸ்ட்களால் மட்டுமே இந்தியாவிலும் ஏன் உலகத்திலும் கூட சோசலிச ராஜ்யத்தை கொணரமுடியும் என்கிற தன் நம்பிக்கையை கனவை காந்தி வெளியிட்டார்.
ஹரிஜன் பத்திரிகையில் தன் வேறுபட்ட பார்வையை அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
“சோசலிஸ்ட்களும் கம்யூனிஸ்ட்களும் வெறுப்பை விதைத்து அதை அதிகப்படுத்துகிறார்கள். வெறுப்பிற்கு பதில் அன்பின் வழிப்பட்டு அகிம்சை முறையில் விவாதம் வழியே நல்வழிப்படுத்தி உணரச் செய்து பொருளாதார சமத்துவம் ஏற்படுத்துவேன்”
காந்தியடிகளின் இந்த வழி நல்லெண்ணமாக இருக்கலாமே ஒழிய நடைமுறை சாத்தியமில்லாதது என கம்யூனிஸ்ட்கள் கருதினர். இந்திய முதலாளிகள் தங்கள் திறமைகளை பயன்படுத்தி சொத்துக்களை பெருக்கலாம். ஆனால் அவர்கள் அதன் தர்மகர்த்தாக்கள் என்றே கருதி செயல்படவேண்டும். இந்த சொத்துப் பெருக்கம் முழுமையாக சுயநலம் சார்ந்தோ சுய தேவைக்கானதாகவோ இல்லாமல் சமூக நலன் சார்ந்தது. இந்தப் பணிக்காக அவர்களுக்கு அரசாங்கம் ‘rate of Commission’ என்பதை நிர்ணயித்து முறைப்படுத்தும். அவர்கள் வாரிசுகளும் அந்த சொத்தை சுவீகரித்து அதே போல் தர்மகர்த்தா முறையில் பரிபாலனம் செய்தல் வேண்டும் என்கிற அவரது கருத்தை உடோபியன் சிந்தனையாகவே நடைமுறைக்கு ஒத்துவராத சிந்தனையாகவே மார்க்சியர் கருத இயலும்.
இதுவரை ஒன்று நடவாமல் இருக்கிறது, நடைமுறையில் இல்லாமல் இருக்கிறது என்பதாலேயே அது எப்போதும் நடைமுறைக்கு வரவே வராது என்று சொல்வதை ஏற்கவேண்டியதில்லை என காந்தி கருதினார். மாற்றம் வரும் என நேர்பட நம்பி செயல்பட்டார்.
அரசு என்பதைப் பொறுத்தவரை கம்யூனிஸ்ட்கள் போலவே காந்தியும் அதை அடக்குமுறைக் கருவியாகவே பார்த்தார். அரசு குறித்து முழு நம்பிக்கை அவரிடம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் சந்தேகப் பார்வையே இருந்தது. கம்யூனிஸ்ட்கள் சோசலிச அரசின் மூலம் சாதிக்க இயலும் என நம்பி செயல்பட்டு வருபவர்கள். ஆனால் சோசலிச அரசே ஆனாலும் மத்தியப்படுத்தப்பட்ட அதிகார குவிப்பு நிறைந்த அரசாங்கம் என்பது அகிம்சை சார்ந்த சமுக
| 34
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
முறைமைக்கு ஏற்றதாக இருக்கமுடியாது என காந்தி நினைத்தார்.
பேணுதார் பிரதான் தன் ஆய்வில் காந்தியை அவர் அகிம்சை சார் புரட்சியாளர் என்பதற்கு மேலாக அவரை அகிம்சை சார்ந்த கம்யூனிஸ்ட் என்றே புரிந்துகொள்ளவேண்டும் என்கிறார்.
காந்தியின் சோசலிசம் - தோற்றுவாய்
மார்க்ஸ் எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கை வழிப்பட்ட சோசலிசம் பொதுவாக விஞ்ஞான சோசலிசம் என்று ஏற்கப்படுகிறது. அதற்கு முன்னதாகப் பேசப்பட்டவைகளை கற்பனாவாத சோசலிசம் என்றும் மார்க்சியர்கள் வகைப்படுத்துவர். இது குறித்து எங்கெல்சின் ஆக்கங்களை மார்க்சியர் சுட்டிக்காட்டுவர். எதுவாக இருந்தாலும் பிறரின் துயர் துடைப்பது என்கிற சிந்தனையின் செயல்பாட்டில் நன்னெறி என்பதும் இணைந்தே செல்லவேண்டும். இந்த நன்னெறிகளை முற்றிலுமாக புறக்கணித்த சிந்தனையாளர் அரிது.
அவரவர் தேவை என்பதை தாண்டி எதையும் வைத்துக்கொள்ளாமல் இருப்போம் என்றால், தேவைப்படுகிறவர் என்ற நிலை இல்லாமல், அனைவரும் சுய நிறைவுடன் வாழும் வாழ்க்கை வசப்படும் என்றே காந்தி சொல்லிவந்தார்.
மார்க்சிசம் என நாம் பேசுவது மார்க்சை முன்வைத்து என்றாலும் எம் என் ராய் குறிப்பிட்டது போல் அச்சிந்தனை தனி ஒருவருடைய சிந்தனையாக இல்லாமல் மார்க்சிற்கு முற்பட்ட சிந்தனையாளர்களுடன் கூடிய உரையாடல் மற்றும் விமர்சனத் தொகுப்பாகவும் இருக்கிறது. விஞ்ஞான சோசலிசம் என்கிற பதம் பொதுவாக மார்க்ஸ் எங்கெல்ஸ் உடன் தொடர்புபடுத்தப்பட்டாலும் அவர்களுக்கு முன்பாகவும் செயிண்ட் சைமன் தனது சோசலிசத்தை science of Universal gravitation என்றே உரிமைகொண்டாடினார். அதேபோல் புருதான் அவர்களும் தனது கோட்பாட்டை விஞ்ஞான சோசலிசம் என்றே அழைத்துக்கொண்டார்.
காந்தியோ 1934ல் ‘விஞ்ஞான சோசலிசம்’ என்னவெனத் தெரியாது என்றார். அப்போது அவருக்கு வயது 65. ஆகாகான் மாளிகை சிறைவாசத்தில்தான் (1942-44) மார்க்ஸ்- லெனின்- ஸ்டாலின் எழுத்துக்களை அவர் வாசித்ததாக அறிகிறோம். உலகம் முழுதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த விஞ்ஞான சோசலிசம் என்பது அவரை கவ்விப்பிடிக்கவில்லை. மார்க்ஸ் , லெனின் ஆகியவர்களின் ‘சமத்துவ சமுதாயம்’ என்பதில் அவர் நல்ல மதிப்பீடு
| 35
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
களையே வைத்திருந்தாலும் விஞ்ஞான சோசலிசம் மட்டுமே பாதை என்கிற பார்வை அவரிடம் தொற்றவில்லை.
மத அடிப்படையிலான நன்னெறிகள் என்பதை அடித்தளமாக கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் துயர்துடைக்கும் அரசியல் சமூக செயல்பாடுகள் என்பதை காந்தி அமைத்துக்கொண்டார். வைஷ்ணவ சிந்தனைகள், ஜைன புத்தமத சிந்தனைகள், பகவத்கீதை, உபநிடதங்கள், மலைப்பிரசங்கம், டால்ஸ்டாய், ரஸ்கின், தோரோ ஆகியவர்களின் சிந்தனைகளே அவரை ஆட்கொண்டன. தனது செயல்களை இவற்றின் துணையோடுதான் அவர் சரிபார்த்துக்கொண்டு பயணித்தார்.
குஜராத்தில் 500 ஆண்டுகளுக்கு மேலாக ஈர்ப்பை உருவாக்கி வரும் நரசிம்ஹ மேத்தாவின் புகழ்வாய்ந்த வைஷ்ணவ ஜனதோ அவரை கவ்விப்பிடித்தது. நாமக்கல் கவிஞர் அப்பாடலை அழகாக மொழிபெயர்த்து தந்திருக்கிறார்.
வைஷ்ணவன் என்போன் யாரென கேட்பின்
வகுப்பேன் அதனை கேளுங்கள்…
பிறருடையத் துன்பம் தனதென எண்ணும்
பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம்;
உறுதுயர் தீர்த்ததில் கர்வம் கொள்ளான்
உண்மை வைஷ்ணவன் அவனாகும்;
உறவென மனிதர்கள் உலகுள யாரையும்
வணங்குபவன் உடல்மனம் சொல் இவற்றில்
அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்;
அவனை பெற்றவள் அருந்தவத்தாள்.
விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை
விளங்கி ஆசைகள் விட்டவனாய்
ஒருப்புடன் அன்னிய மாதரைத் தாயென
உணர்வான் வைஷ்ணவன்; தன் நாவால்
உரைப்பதிற் பொய்யிலன்; ஒருபோதும்அவன்
ஊரார் உடைமையைத் தொடமாட்டான்;
வரைப்புள குணமிவை வகிப்பவன் எவனோ
அவனே உண்மை வைஷ்ணவனாம்.
மாயையும் மோகமும் அணுகா தவனாய்
மனத்தினில் திடமுள வைராக்கியன்;
நாயக னாகிய ஸ்ரீரா மன்திரு
நாமம் கேட்டதும் மெய்ம்மறந்து
போய், அதில் பரவசம் அடைகின்ற அவனுடைப்
பொன்னுடல், புண்ணிய தீர்த்தங்கள்
ஆயன யாவையும் அடங்கிய க்ஷேத்திரம்
ஆகும்; அவனே வைஷ்ணவனாம்.
கபடமும் லோபமும்
| 36
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
இல்லா தவனாய்க்
காம க்ரோதம் களைந்தவனாய்,
தபசுடை அவனே வைஷ்ணவன்; அவனைத்
தரிசிப் பவரின் சந்ததிகள்
சுபமடைவார்கள்; எழுபத் தோராம்
தலைமுறை வரையில் சுகமுறுவர்;
அபமறப் புனிதம் அடைகுவர்; பிறப்பெனும்
அலைகடல் நீந்திக் கரைசேர்வார்.
இதற்கு தனியாக பொருளுரைக்க தேவையில்லை. அதில் பேசப்பட்டுள்ள உயர் குணங்களை அடைய காந்தியடிகள் முயற்சித்தார் என்பதை எவரும் ஏற்கமுடியும்.
அனைத்து உயிர்கள்பாலும் காருண்யம் - வன்முறையற்ற அகிம்சை என்ற வாழ்க்கைமுறையை அவர் ஜைன சிந்தனைகளில் பெற்றார். உடல் சார்ந்த காயங்கள் என்பதல்லாமல் சமூக, பொருளாதாரவகைப்பட்ட மானுடத்துயர் நீக்கமென்பதற்கும் இச்சிந்தனையை அவர் நீட்டித்தார். ஜைனத்தின் முக்கிய 5 விரதங்களாக அகிம்சை, வாய்மை, கள்ளாமை, பிரமச்சரியம், அவாவுறுத்தல் ( Ahimsa, satya, Asteya, Brahmacharya, aparigraha) என்பதை அவர் தன் ஆசிரம விதிகளின் பகுதியாக இணைத்து அனுசரிக்க வற்புறுத்தியதை நாம் பார்க்கமுடியும்.
உண்மையைத்தேட எனக்கு மிக அணுக்கமாக இருப்பது பகவத்கீதை என்றே அவர் தெரிவித்துவந்தார். தாய், காமதேனு என்றெல்லாம் கீதையை வர்ணித்துள்ளார். எனக்கு கதவுகளை எப்போதும் திறக்கும் சாவி- எனது வழிகாட்டி- என்னை ஒருபோதும் தாழ்த்திவிடாமல் அழைத்து செல்வது என்ற நம்பிக்கையை காந்தி வெளிப்படுத்தியுள்ளார். Self realisation is the subject of the Gita as it is of all scriptures"சுயம் உணர்தல் என்பதுதான் மனித வாழ்விற்கான பெரும் முயற்சி. காந்தியடிகளின் சுயம் உணர்தல் என்பதற்கான கீதை சார்ந்த விளக்கத்தை பார்க்கிறோம். சுயம் உணர்தலுக்கான வழி பயன்கருதா செயல் என அவர் சொல்வதைப் பார்க்கிறோம்.
செயலின் பலனைத் துறத்தல் என்பது தான் சூரியன் போன்றது. அதை சுற்றும் கிரகங்களாக கடமைப்பாடு, அறிவு, ஓய்வு எல்லாம் அமையலாம். இந்த உன்னத வழியை கீதைத்தான் தனக்கு காட்டுவதாக காந்தி கருதிவந்தார். பலன்கள் மீது பற்று
| 37
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
நீங்கிடின் வன்முறை நாட்டம் இராது. அகிம்சையும் உண்மையும் தொழிற்படும் என அவர் கருதினார். உண்மையை நெருங்குவதற்கான சிறந்த வழி அன்புதான் என்றார். உண்மை எனும் கடலில் நீந்தவேண்டும் என்றால் ஒருவர் தன்னை பூஜ்யமாக்கிக்கொள்ளவேண்டும். அன்பும் அகிம்சையும் வேறானவையல்ல - ஒன்றேதான் . அகிம்சையின்பாற்பட்ட சமுதாயத்தின் செல்திசை சமத்துவ சமுதாயமாகவே இருக்கமுடியும் என அவர் நம்பி செயல்பட்டார்.
ஈசா உபநிடதத்தின் இந்த வாக்கியங்களில் சோசலிசம் பேசப்படுவதாக காந்தி உணர்ந்தார்.
"ஓம் ஈசாவாஸ்யமிதக்ம் ஸ்ரவம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்
தேன த்யக்தேன புஞ்ஜிதா மா க்ருத கஸ்யஸ்வித் தனம் "
இவ்வுலகு மாறுகின்ற இயல்புடையது. அனைத்தும் இறைவனால் எனப் புரிந்து உலகை அனுபவிக்கவேண்டும். பணம் யாருடையது? அதற்காக ஆசைப்படாதே என்பதை இதன் பொருளாக கொள்ளலாம்.
பொருள்நாட்டத்திலிருந்து விலகியிருத்தல் எனும் ஒருவகை துறவு குறித்து அவர் எப்போதும் சொல்லிவந்தார். தேவையான அளவு சரியாக சாப்பிடுதல், உடை, உறைவிடம் என்பதைத்தாண்டி அனுபவிப்பு வேறில்லை என்ற மனநிலைக்கு பழகுவது- துறவுடன் பற்றின்மைபூண்ட வாழ்க்கையை அனுபவிப்பது என்பது குறித்து அவர் பேசினார். பிறர் பொருள்மீது ஆசை எதற்கு எனவும் அவர் வினவினார்.
அன்பின்மை மறையட்டும்- வாழும் உயிர்களிடத்தெல்லாம் அன்பும் காருண்யமும் பெருகட்டும் என்பதே புத்தர் சொல்லித்தந்தது. தாராளமாக கொடுத்து வாங்கிக்கொள்ளுங்கள். ஆனால் பொறாமைகொண்டு எவரிடமிருந்தும் கட்டாயப்படுத்தியோ வன்முறை மூலமோ, ஏமாற்றியோ எதையும் பெறாதீர்கள் என்பதையும் புத்தரிடம் கற்கிறோம்.
எட்வின் ஆர்னால்ட் வழியே கீதையை மட்டுமில்லாமல் புத்தரையும் காந்தி கற்றார். கொழும்புவில் நவம்பர் 15, 1927ல் காந்தி ஆற்றிய உரையில் உலகின் ஆசைகளை பற்றை புத்தர் கைவிட்டது உலக மக்களின் சந்தோஷத்திற்காகத்தான் என்பதை எடுத்துரைத்தார். உலகின் சந்தோஷத்திற்காக உண்மையின் தேடலுக்காக பல மனிதர்கள் ஏராள அவதிகளை அனுபவித்து தியாகம் செய்துள்ளதை சுட்டிக்காட்டி
| 38
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
னார். எவ்வளவு கீழான மனிதர் என்று பார்க்கப்படுபவருக்கும் வாழ்வுண்டு என்பதை உணர்த்தியவர் புத்தர். விதைப்பது எதுவோ அதையே அறுவடை செய்வோம் என புத்தர் சொல்லியதை அழகாக காந்தி எடுத்துச் சொன்னார். . காந்தியின் சர்வோதாய சிந்தனையில் அகிம்சை அனுசரிப்பில் புத்த சிந்தனையின் தாக்கத்திற்கு இடமுண்டு.
ஏசுவின் மலைபிரசங்கம் அவரின் இதயத்திற்கு நெருக்கமாக இருந்தது. ஸ்டான்லி ஜோன்ஸ் காந்தியை குறிப்பிட்டபோது கிறிஸ்துவர்களைவிட சிறந்த கிறிஸ்துவர் என்றும் கிறிஸ்துமயமான இந்து என்றும் சொன்னார். அவருடன் பழகிய கிறிஸ்துவ பாதிரிமார்கள் அவர் ஏசு சொன்னபடி வாழ்ந்தவர் என்கிற மதிப்பீட்டைக் கொண்டிருந்தனர். கிறிஸ்துவம் அன்பை போதித்தது. பொறாமைத்தீ பற்றாமல் தற்காத்துக்கொள்ள அறிவுறுத்தியது. ஏழைகளுக்கு இரங்கி உதவுபவர்களுக்கு சொர்க்கம் காத்திருப்பதாகவும் அது மொழிந்தது. காந்தி கிறிஸ்துவம் குறித்து செறிவான உரையாடல்களை மேற்கொண்டவர். அவர் ஏசு குறித்து இப்படி குறிப்பிடுகிறார்.
“He was certainly the highest example of one who wished to give everything asking nothing in return”- “the virtue of loving one’e neighbour as oneself and of doing good”
ஜோசப் டோக் காந்திஜியின் முதல் வாழ்க்கை வரலாற்றை தந்தவர் என அறியப்படுபவர். காந்தி மலைப்பிரசங்கத்தின் முழுமையான தாக்கம் நிறைந்தவராக இருந்ததை டோக் சொல்கிறார்.
இந்திய தத்துவங்களிலிருந்து மட்டுமல்லாமல் டால்ஸ்டாய், ரஸ்கின், தோரோ சிந்தனைகளாலும் ஆட்கொள்ளப்ப்பட்டதாக காந்தியே தெரிவித்துள்ளதை அறிவோம். மார்ச் 20 1910ல் அவர் இந்திய சுயராஜ்யம்- இந்திய ஹோம் ரூல் புத்தகத்திற்கு தந்த முன்வாசகத்தில் இதைக் குறிப்பிட்டு சொல்கிறார்.
“.. while the views expressed in Hind Swaraj are held by me, I have endeavoured humbly to follow Tolstoy, Ruskin, thoreau and other writers besides the masters of indian Philosophy.”
இந்த மூவருமே உழைப்பின் மேன்மையை, பணக்காரர்கள் கைக்கொள்ளவேண்டிய தர்மகர்த்தா முறையை பெரிதும் பேசியவர்கள். டால்ஸ்டாயின் Kingdom of God is within you , The Gospel in Brief, what to do போன்ற ஆக்கங்கள் காந்தியிடம் பெரும் செல்வாக்கை
| 39
|
ஆர். பட்டாபிராமன்
|
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
|
End of preview. Expand
in Data Studio
Tamil தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல் Dataset by ஆர். பட்டாபிராமன்
Description
This dataset contains Tamil தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல் texts by ஆர். பட்டாபிராமன், processed for language model pretraining.
Contents
- 154 text chunks
- Author: ஆர். பட்டாபிராமன்
- Genre: தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்
- Total chunks: 154
Usage
from datasets import load_dataset
dataset = load_dataset("Naveen934/tamil_data_na_thozhar_gandhi")```
- Downloads last month
- 14